ஜேர்மனியில், நேற்று, உணவு இடைவேளையின்போது வகுப்பறைக்குள் நுழைந்த ஒரு மாணவர், சக மாணவி ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியது.
சக மாணவியை துப்பாக்கியால் சுட்ட மாணவர்
ஜேர்மன் நகரமான Offenburgஇல் அமைந்துள்ள பள்ளி ஒன்றில், நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த மாணவர் ஒருவர், 15 வயது மாணவி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
ஜேர்மனியில் பள்ளியில் மாணவர் செய்த பயங்கரச் செயல்: மாணவி பலி | Student Dies In Offenburg School Shooting
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி உயிரிழந்துவிட்டார். அந்த மாணவரும் மாணவியும் முன்பு காதலித்ததாகவும், பின்னர் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பள்ளியை சுற்றி வளைத்த பொலிசார்
தகவலறிந்து, ஏராளமான பொலிசார் பள்ளியை சுற்றி வளைத்துள்ளார்கள்.
180 மாணவ மாணவியர் பள்ளியிலிருந்து உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பெரும் பொலிஸ் ஆபரேஷனுக்குப் பின் அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் 15 வயதுதான் ஆகிறது. பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
0 comments:
Post a Comment