சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கோரி கட்சி ஒன்றின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடும் கட்டுப்பாடுகள் விதிக்க அழைப்பு
சமீப காலமாக சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கெதிரான குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன. குறிப்பாக, சுவிஸ் மக்கள் கட்சி, புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கோரி வருகிறது.
கடந்த வார இறுதியில் தனது கட்சியினரிடையே பேசிய சுவிஸ் மக்கள் கட்சியின் தலைவரான Marco Chiesa, புலம்பெயர்ந்தோருக்கு எளிய மருத்துவக் காப்பீடு என்னும் ஒரு திட்டத்தை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்காமல், வெளிநாடுகளில் பரிசீலிக்கவேண்டும் என்றும் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
எல்லா பிரச்சினைகளுக்கும் புலம்பெயர்தல்தான் காரணமாம்
நம் நாட்டில் நிலவும் கிட்டத்தட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் அதிக அளவிலான புலம்பெயர்தல்தான் காரணம் என்று கூறும் Marco, சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வரி விதிப்பதுபோல, புலம்பெயர்ந்தோருக்கும் வரி விதிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்கள் அதிகரித்துவரும் நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு நம் மருத்துவக்காப்பீடு வழங்கப்படுவதை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment