காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் போரை நிறுத்த சர்வதேசளவில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிற கோரிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது.
ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
குறிப்பாக இதில் 4000 இற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இஸ்ரேலிடம் போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்தார். இது இஸ்ரேலின் எதிர்காலத்திற்கும் நல்லத்தில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை 57 இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் செளதி அரேபியாவில் சந்தித்து, போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
பிணைக்கைதிகளை விடுவிக்க கோரிக்கை
மேலும் லண்டனில் 3 இலட்சம் பாலஸ்தீன ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போர் நிறுத்தம் கோரி பேரணி நடத்தியுள்ளனர்.
இருப்பினும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இது தொடர்பில் தெரிவிக்கையில், ஹமாஸ், பிணைக்கைதிகள் 240 பேரையும் விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அமெரிக்கா சார்பில் முன்மொழியப்பட்ட நாள்தோறும் நான்கு மணி நேர போர் இடைவெளி நேரத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டாலும் தாக்குதல் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment