மேற்கு லண்டனைச் சேர்ந்த சிறுமிக்கு ஸ்ட்ரெப் ஏ அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட இரண்டே நாட்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இரண்டு கால்களும் ஐந்து விரல்களும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டை வலி தொடக்கத்தில்
மேற்கு லண்டனைச் சேர்ந்த 4 வயது Aiyla Mota தொண்டை வலி என்றே தொடக்கத்தில் தமது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து தாயார் Eulanda Griffith உடனடியாக 111 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க, அவர்கள் சொறி வருவதைக் கண்காணிக்க கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுமி Aiyla மூச்சுவிடவும் சிரமப்பட, வயிற்று வலி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையை நாடியுள்ளனர்.
ஆனால் அவரது உடல் நிலை திடீரென்று மோசமடையவும், மூன்று வாரங்களுக்கு கோமா நிலையில் வைக்கப்பட்டார். கண் விழித்த சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது இரு கால்களும் 5 விரல்களும் துண்டிக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி, இடது கண்ணில் இரத்த ஓட்டம் இல்லாததால், தற்போது ஓரளவு பார்வையற்றவள் என்ற நிலையில் உள்ளார்.
இந்த கோலத்தில் பார்ப்பது
வெறும் நான்கு வயதான தமது மகளை இந்த கோலத்தில் பார்ப்பது, தம்மால் தாங்க முடியவில்லை என கூறும் Eulanda Griffith, ஸ்ட்ரெப் ஏ பாதிப்பு எவ்வளவு கொடூரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 23ம் திகதி தான் தொண்டை வலி என சிறுமி Aiyla தாயாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து கடுமையான இருமலும், வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுநீர் கழிக்கவும் சிறுமி Aiyla சிரமப்பட்டுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையை தொடர்பு கொண்டு மகளின் நிலை குறித்து விளக்கியுள்ளார். மார்ச் 25ம் திகதி சிறுமி Aiyla மூச்சுவிட சிரமப்பட, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில் நிலை மேலு மோசமடைய, கோமா நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையிலேயே செயல்படாத கால்கள் மற்றும் விரல்களை மருத்துவர்கள் துண்டித்துள்ளனர்.
மூன்று மாத காலம் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் ஜூன் 23ம் திகதி சிறுமி Aiyla வீடு திரும்பியுள்ளார். தற்போது உரிய பயிற்சிகளும் சிகிச்சையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment