லண்டனில் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூத எதிர்ப்பு பதாகை
குறித்த பெண் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பில் யூத எதிர்ப்பு பதாகை ஒன்றை ஏந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதுவே, அவரை பொலிஸ் தேடுவதற்கான காரணமாக தெரிவிக்கின்றனர்.
அந்தப் பெண் ஏந்தியிருந்த பதாகையில் ஜனாதிபதி ஜோ பைடனை பிசாசாக சித்தரிக்கப்பட்டிருந்தது. தலையில் கொம்புகளுடனும் கூரான பற்களுடனும் ஜோ பைடன் அந்த பதாகையில் காணப்பட்டார்.
அத்துடன், உலகின் அனைத்து தீமைகளுக்கும் காரணமானவர், மூளையாக செயல்படுபவர் எனவும் எழுதப்பட்டிருந்தது. குறித்த பெண்ணை எதிர்கொண்ட இன்னொரு பெண், இப்படியான செயல்களுக்கு எதிராக ஏன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
உரிய நடவடிக்கை
அத்துடன், கோபத்தால் உடல் நடுங்குகிறது எனவும் அப்படியான செயலை தம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் அந்த பெண் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Woman At Pro Palestine Protest Met Police
இந்த நிலையில், குறித்த பெண்ணை தீவிரமாக தேடிவருவதாக பொலிஸ் தரப்பு பதிலளித்துள்ளது. அடையாளம் காணப்பட்டதும் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment