சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத போதை மருந்து கடத்தல்கள் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி தீர்வொன்றினை முன்வைத்துள்ளார்.
அவ்வகையில், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மதில் சுவர் எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மியாமியில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவு விவாதமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வருகின்றனர். அவ்வாறான வேட்பாளர்களில் ஒருவராக விவேக் ராமசாமி காணப்படுகின்றார்.
Vivek Ramaswamy Wants A Border Wall Canada
எல்லை பாதுகாப்பு
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இவ்வாறு மதில் சுவர் உருவாக்கப்பட வேண்டும். தமது கட்சியின் எல்லை பாதுகாப்பு கொள்கை போதுமானதல்ல.” என்றார்.
0 comments:
Post a Comment