நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, November 12, 2023

கனடாவில் பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்: மற்றுமொரு சீக்கியர் சுட்டுக்கொலை






க னடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எட்மண்டன் நகரில் உள்ள எரிவாயு நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் நபர் ஒருவரையும், அவரது 11 வயது மகனையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கொல்லப்பட்ட நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் உப்பல் (41) என்பது தெரியவந்தது.


மக்களிடம் கோரிக்கை 
இது குறித்து எட்மன்டன் காவல்நிலைய கொலைப் பிரிவின் பணியாளர் சார்ஜெண்ட் ராப் பிலாவே கூறுகையில், 'இந்த வன்முறை நிகழ்வின் விளைவாக இன்று ஒரு குழந்தை தனது உயிரை இழந்தது குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம்.



துப்பாக்கிச்சூட்டின் விளைவாக குழந்தைகளின் இழப்பு அல்லது காயம் அளவிட முடியாதது மற்றும் இந்த விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்ட எவரும் கூடிய விரைவில் முன்வருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்' என கூறியுள்ளார்.


கனடாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீக்கிய தலைவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment