மோசடியான வீசாக்களை பயன்படுத்தி ஒஸ்திரியவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லை கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு இளைஞர் கிளிநொச்சியைச் சேர்ந்த 25 வயதுடையவர், மற்றையவர் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த 27 வயதுடையவர்.
துருக்கிய எயார்லைன்ஸ் விமானம் 11–731 இல் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் செல்வதற்காக இந்த இரண்டு இளைஞர்களும் இன்று காலை 07.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
துருக்கி எயார்லைன்ஸ் அதிகாரிகளிடம் தமது விமான அனுமதியை மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்களில் ஒஸ்திரிய வீசாக்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லை ஆய்வுப் பிரிவின் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த விசாக்கள் போலியானவை என தெரியவந்துள்ளது.
பின்னர், இளைஞர்களிடம் விசாரணை நடத்திய போது, பொரளை பகுதியில் உள்ள தரகர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
அதன்படி, குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment