அக்டோபர் மாதத்தின் மத்தியில், சுவிட்சர்லாந்து, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஜேர்மனி அறிவித்திருந்தது.
முதலில், 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர், அக்டோபர் மாத இறுதிவரை 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.
கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு
தற்போது, எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை, ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் மாகாண தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Germany Extends Border Controls Curb Immigration
நேற்று ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக, இந்த எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment