ஒரு எட்டு மாதக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அந்தக் குழந்தைக்கு இத்தாலி குடியுரிமை வழங்கியும், பிரித்தானியா அதைக்குறித்தெல்லாம் கவலைப்படாமல், மோசமான முடிவொன்றை எடுத்துள்ளது.
உயிருக்குப் போராடும் எட்டு மாதக்குழந்தை
பிரித்தானியக் குழந்தையான இண்டி (Indi Gregory) பிறந்து எட்டு மாதங்களே ஆகிறது. அவளுக்கு, ஒரு அபூர்வ மைட்டோக்காண்ட்ரியா நோய். அதாவது, அவளுடைய உடலிலுள்ள செல்களால் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது.
இங்கிலாந்திலுள்ள ஒரு மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் இனி பயனில்லை, ஆகவே, அவளுக்கு கொடுக்கப்பட்டுவரும் செயற்கை சுவாசத்தை நிறுத்துவது என மருத்துவமனை முடிவு செய்தது.அதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்துவிட்டது
குழந்தை இண்டியின் பெற்றோர், தங்கள் குழந்தையை இத்தாலியிலுள்ள Bambino Gesu மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க பிரித்தானிய அரசிடம் அனுமதி கோரினார்கள்.
இத்தாலி எடுத்த அதிரடி நடவடிக்கை
இந்த தகவல் அறிந்த இத்தாலி பிரதமர், உடனடியாக குழந்தை இண்டிக்காகவே நாடாளுமன்றத்தைக் கூட்டினார். நாடாளுமன்றத்தில், குழந்தை இண்டிக்கு இத்தாலியக் குடியுரிமை வழங்கப்பட்டது.
குட்டிக் குழந்தை இண்டி பிழைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று கூறுகிறார்கள். ஆனாலும், அவளுடைய உயிரைக் காப்பாற்ற கடைசி வரை என்னாலான முயற்சிகளைச் செய்வேன், அவளுடைய பெற்றோர் அவளுக்காக என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ, அதற்கும் உதவியாக இருப்பேன் என்று கூறினார், இத்தாலி பிரதமரான Giorgia Meloni.
பிரித்தானியா எடுத்துள்ள மோசமான முடிவு
ஆனால், அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பிரித்தானியா, குழந்தையின் செயற்கை சுவாசத்தை நிறுத்தியே தீருவது என முடிவு செய்துள்ளதால் குழந்தையின் பெற்றோர் வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளார்கள்.
ஆம், பிரித்தானிய உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், குழந்தையின் செயற்கை சுவாசத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். பல்வேறு மருத்துவக் காரணங்களால், குழந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ள நீதிபதி, அது குழந்தையின் நலனுக்கு எதிரானது என்று கூறி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்தாலி உதவ முன்வந்தும், அந்த உதவியை ஏற்றுக்கொள்ள பிரித்தானிய மருத்துவர்களும் நீதிமன்றங்களும் மறுத்துள்ளது அவமானத்துக்குரிய செயல் என்று கூறியுள்ள இண்டியின் தந்தையான டீன் (Dean Gregory), நான் ஒரு தந்தையாக இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டதோ, எதற்காகவும் கெஞ்சியதோ கிடையாது. நான் இப்போது என் பிள்ளை உயிரிழப்பதைத் தடுக்க தயவு செய்து உதவுமாறு பிரித்தானிய அரசைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment