This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, August 31, 2018

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் காதலால் சிறுமிக்கு ஏற்பட்ட அவல நிலையை பாருங்க..!



இந்தியா - ஹரியானா மாநிலம் இன்ஸ்டாகிராமில் காதல் ஏற்பட்டதால் 11 வயது சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராமின் பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் வசித்து வரும் பல்கலைக்கழக மாணவர் பையுஷ் மற்றும் தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளனர்.
இந்நிலையில் முதலில் நட்பாக பேசிகொண்டு இருந்தனர், பின் காலப்போக்கி நட்பு காதலாக மாறியுள்ளது. பின் பையுஷ் சிறுமியிடம் ஆசை வார்ததைகளை கூறி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் மாற்றங்களை கண்ட தாயார் சிறுமியை பின் தொடர்ந்தார். பையுஷ் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தாயார்க்கு தெரிய வந்தள்ளது.
மேலும், விடயமறிந்த சிறுமியின் தாய் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த பையுஷை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வரும் பொலிஸார், குற்றஞ்சாட்டபட்டவர் சிறுமியை இரு முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார் என கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பையுஷ் மீது பல குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. ஓடி வந்து சிகிச்சை அளித்த அமைச்சர்!



சாலை விபத்தில் சிக்கிய தம்பதிக்கு அமைச்சர் சரோஜா சிகிச்சையளித்துள்ளார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஒரு டாக்டர். எம்.டி., டி.ஜி.ஓ. படித்தவர். மகப்பேறு மருத்துவராக அரசு மருத்துவமனை முதல் சவுதி அரேபியா வரை சென்று பணியாற்றியவர்.
ராசிபுரத்தை அடுத்து கூனவேலம்பட்டிபுதூர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் பழனிவேல் என்பவர் மனைவி கமலத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பைக்கில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலும் கமலமும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியாம் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து அனுமதித்தார்.
இந்த தகவல் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு தெரிந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார் சரோஜா. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பழனிவேலுக்கும் கமலத்துக்கும் சரோஜாவே ஆறுதல் கூறி சிகிச்சையும் அளித்தார்.

கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்!






கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட  நித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்
குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது  அவரது வயிற்றில் வளந்த குழந்தை என்னுடையதுதான்   அதனால் அவள்  தனை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள் பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து 28.08.2017 அன்று  அவள்  கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான்  எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிலில்  ஏறிக் கொண்டேன் பின்னர் அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம் வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள் அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்க்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது அதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவளது கழுத்தில் பட்டியில் அவளது தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் பின்னர் இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக் அவளது பாவாடை மேற் சட்டடை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு  மோட்டார் சைக்கிளில் வந்து கனகபுரம் பகுதியில் அவளின் பாவாடையை எறிந்துவிட்டு கான்பாக் மற்றும் மேல்  சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல்  வீட்டுக்கு வந்தேன்  வந்து பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கில் கேல்மற் என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன் குடித்து நானும் சாவோம் என்று பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் ஒளித்துவைத்திவிட்டேன் சம்பவ இடத்தில்  பெலிற்  மற்றும்  சில தடையங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன் இக் கொலையை நான் மட்டுமே செய்தேன் என்னால் சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் காட்ட முடியும் நான் தான் இதனை செய்தேன்  என குறித்த வாக்குமூலத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

  கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன சிஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்த்தன பொலிஸ் அத்தியட்சகர் சமுத்திர ஜீவ பொலிஸ் மூலஸ்தான பதில் பொலிஸ் பரிசோதகர் லலித்தரத்ன ஆகியோரின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி மாவட்ட  பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்தினம் ஜெசிந்தனின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த உத்தியோகத்தர்களான நிஹால் ,விஜயசேகர,மிலன், சங்கர் சந்தன ,சிவதாஸ் , லீலாவதி ,அசங்க ஆகியோர்  சிறப்பாக செயற்பட்டு

தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில்   இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும்   சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே  கோபுர அலையிலையே  நகர்ந்துள்ளமை என்பவற்றைக் வைத்து இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற் சாலையில் கடமையில் இருந்த குறித்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுதே சந்தேக நபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர்   அவரால் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில்  இருந்து குறித்த பெண்ணின் பாவடை போன்றவற்றை மீட்ட பொலிசார் அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கில் அவர் பாவித்த தொலைபேசி , ஹெல்மட் , மாற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டுள்ளனர் அம்பாள் குளம் பகுதியில் விடப்பட்ட மேற் சேட் என்பவற்றை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிசார் மீட்டிருந்தனர்  பின்னர் அவரது மனைவி யின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு குறித்த விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது  சந்தேக நபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்ப்டுள்ளதுடன் சட்ட ரீதியான ஆவணங்கள் தயார் படுத்தப்பட்டு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப் பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது  மேலும் இந்த விசாரணைகளில் பெரிதும் தமக்கு உதவிய கிளிநொச்சி ஊடகவியாளர் ஆன  எஸ்.என்.நிபோஜன் மற்றும் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் அசோக்குமார் ஆகியோருக்கு பொலிசார் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்








லசித் மலிங்காவின் சுவாரசிய காதல் கதை கசிந்தது




இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லஷித் மலிங்கா, இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு மலிங்காவின் காதல் கதை குறித்து பார்ப்போம்.

இலங்கை அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனது அதிவேக பந்துவீச்சின் காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

பன்னாட்டு இருபது20 போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களில் தனது கிரிக்கெட் வாழ்க்கை ஒருபுறம் இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை மீது அதிக அக்கறை கொண்டவர்.

எதனையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட காரணத்தினாலேயே இவரை மணமுடித்துள்ளார் தன்யா பெரேரா.

மிகவும் எளிமையான குணம் கொண்ட மலிங்காவின் காதல் கதை மிகவும் சுவாரசியம் நிறைந்தது. இவர் முதல் முறையாக தனது காதல் மனைவி தன்யாவை ஹொட்டல் ஒன்றில் வைத்து விளம்பர நிகழ்ச்சியின் போது சந்தித்துள்ளார்.

அப்போது, அந்த நிகழ்ச்சியின் மேலாளராக இருந்தவர் தன்யா. Hikkaduwa இல் உள்ள ஹொட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பே, இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைவதற்கு காரணமாக அமையும் என இருவருமே எதிர்பார்க்கவில்லை.

கண்டதும் காதல் என்பார்கள். ஆனால் இவர்கள் சந்திப்பில் இது நடக்கவில்லை. ஏனெனில், தன்யாவுக்கு அப்போது கிரிக்கெட் குறித்து அதிகமாக ஆர்வம் இல்லாத காரணத்தால் , மலிங்காவிடம் குறைவாக பேசியுள்ளார்.

இரண்டாவதாக, Galle இல் உள்ள ஹொட்டலில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, தங்களது தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டனர்.

அதன்பிறகு தினமும் தொலைபேசி மூலம் அதிக நேரம் பேசியுள்ளனர். கிரிக்கெட் விளையாடுவதற்காக லசித் மலிங்கா, வெளிநாடுகளுக்கு செல்கையில் இவர்கள் மனதால் பேசிக்கொண்ட நேரம் அதிகமானது.

ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில், தனது மனதுக்குள் மறைத்துவைத்திருந்த காதலை தன்யாவிடம் தெரியப்படுத்தியுள்ளார் மலிங்கா. ஆனால், இதற்கு தன்யா சொன்ன பதில், எனது பெற்றோரிடம் சம்மதம் வாங்குங்கள். அதன் பிறகு நான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.





இதனைத்தொடர்ந்து, தன்யாவின் வீட்டிற்கு சென்ற மலிங்கா, அங்கு அவரது அம்மா மற்றும் சகோதரரை சந்தித்து பேசியுள்ளார். இருப்பினும் இந்த திருமணத்திற்கு தன்யாவின் தந்தை சம்மதம் முக்கியம் என்பதால், அமெரிக்காவில் இருந்த தன்யாவின் தந்தை வந்தவுடன் அவரையும் சந்தித்துள்ளார்.

தனது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் எனது தந்தை, இதனால் எனது தந்தையின் சம்மதம் மிக முக்கியம், இதனால் அவரது ஆசிர்வாதத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் தன்யா.

அதன்படியே, இவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் திகதி இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கிளிநொச்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் பூதவுடல் நல்லடக்கம்


கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு முறிகண்டி சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கருப்பையா நித்தியகலா பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






பெண்கள் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா...இதை மட்டும் செய்யுங்கள் போதும்!



பெண்களுக்கு நோய்கள் ஏற்படாமல் தடுத்ததில் மஞ்சளுக்கு நெடுங்காலமாக மிகப் பெரிய பங்கு உண்டு. மாதவிடாய் நாட்களில் உண்டாகும் கிருமிகளை அழிக்கவும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் முறை பயன்பட்டிருக்கிறது.
உடலில் தேவையில்லாமல் முளைக்கும் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்க மஞ்சளைத் தவிர சிறந்த பொருள் வேறெதுவுமில்லை. கிருமிநாசினி செய்கை கொண்டது என்பதால், தோல் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமையும் மஞ்சளுக்கு இருக்கிறது.
‘மஞ்சள் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமோடு’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் உடலில் ஏற்படும் நாற்றம், தோல் நோய்கள், சில வகையான கப நோய்கள் போன்றவை நீங்கும் என்பதை உணர்த்துகிறது. மஞ்சள் குளியலால் தலைபாரம், தலைவலி குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
‘மஞ்சள் தேய்த்துக் குளிப்பது அநாகரிகமான செயல்’ என்று இன்றைய தலைமுறையினர் கருதும் நிலையில், அதன் பயன்களை முந்தைய தலைமுறையிடம் கேட்டால் மஞ்சளின் மகிமை குறித்து நமக்குப் புரியும். மஞ்சளை அரைத்து, அதைக் குளிப்பதற்குப் பயன்படுத்தும் வயதான பாட்டிகளின் தோல் ஆரோக்கியத்தை இன்றும் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடியும்.
இன்றைய நகரவாசிகள் சமையல் தவிர்த்து மஞ்சளை வேறு எதற்கும் பயன்படுத்தாத நிலையில், மஞ்சள் குளியல் முறை மீண்டும் உயிர் பெற்றால், தங்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து பெண்கள் தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும்.
தோலில் பாதிப்பு உண்டாகாமல் ‘பள பள’வென ஜொலிக்கும் தேகத்தைப் பெற, மஞ்சள் தேய்த்துக் குளிப்பது பயன் தரும் என்பதை ‘பொன்னிறமாம் மேனி புலால் நாற்றமும் போம்’ என்ற பாடல் வரியின் மூலம் விளக்குகிறார் சித்தர் அகத்தியர். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் தோல் புத்துயிர் பெறுவதோடு, தேகத்தில் உருவாகும் வியர்வை நாற்றமும் மறையும் என்பதுதான் இதன் பொருள்.
மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், தோல் சுருக்கம் ஏற்படுவது தள்ளிப்போவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் தீவிரமடையாது. ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும்.
பெரும்பாலான வடநாட்டுத் திருமணங்களில், மணமக்களுக்கு ‘மஞ்சள் பூச்சு’ நிகழ்வு தவறாமல் இடம்பெறுகிறது. கிருமிகளை அழிப்பதும், முகப்பொலிவை உண்டாக்குவதும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதும்தான் ‘மஞ்சள் பூச்சு’ செய்வதன் விஞ்ஞானப் பின்னணி.
தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் மஞ்சள் நீரூற்று விழாக்களின் பாரம்பரியத்திலும் நோய்களை அழிக்கும் அறிவியல் உள்ளது. தேங்காய்ப் பாலோடு மஞ்சள் கலந்து குளிக்கும் வழக்கம் மலையாள மக்களிடம் இன்றளவும் தொடர்கிறது.
மஞ்சள் போலவே மணமிக்க கஸ்தூரி மஞ்சளையும் குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். இதை அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால், உடலில் உண்டாகும் சிறுசிறு கொப்பளங்கள், அரிப்பு, கரப்பான் எனப்படும் ஒரு வகையான தோல் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. முகப் பருக்களில் கிருமி சஞ்சாரம் ஏற்படுவதும் தடுக்கப்படும். குளித்து முடித்த பிறகு நல்ல வாசனையையும் கொடுக்கும்.
சில கடைகளில் கிடைக்கும் மஞ்சள் தூளில் மரத் தூள், மாவுப் பொருள் போன்றவற்றைக் கலப்படம் செய்துவிடுகின்றனர். ‘வெளியில் பூசிக் குளிப்பதற்குத் தானே, கலப்படம் இருந்தால் என்ன?’ என்று சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. கலப்பட மஞ்சளை உட்கொள்வதால் மட்டுமல்ல, வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தினாலும் உடலுக்குப் பாதகம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. தரமற்ற மஞ்சள் நிச்சயமாகத் தோலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும்.
‘மஞ்சள் தேய்த்துக் குளிப்பது தோலுக்குப் பாதகமானது’ என்று தவறாகப் பிரசாரம் செய்துவிட்டு, கிருமிநாசினி கிரீம்களிலும், பாடி லோஷன்களிலும் மஞ்சளின் சாரத்தை வணிக நிறுவனங்கள் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள். நம்மில் பலரும் வெறும் விளம்பரங்களுக்கு மயங்குகிறோம்! இனிமேலாவது உண்மைப் பலன்களுக்கு மயங்குவோம்.

கிளிநொச்சி யுவதி நித்தியகலா படுகொலையில் அதிரடிக் கைதுகள் ஆரம்பம்



கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆடைத் தொழிற்சாலையொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றி வந்த பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமையும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரில் குளிரூட்டியை பயன்படுத்துபவர்களா ? சில விதிகள்!





கார் பயணங்களின் போது குளிரூட்டியினை பயன்படுத்தாமல் சிறிது தூரம் கூட பயணிக்க முடியாது என்ற வகையில், குளிரூட்டியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்தற்கு சில விதிமுறைகள் உள்ளன.

கோடைக்காலம் மட்டுமல்ல, அனைத்து காலத்திலும் காரில் குளிரூட்டி அமைப்பின் பயன்பாடு இன்று இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. கார் குளிரூட்டி அமைப்பை முறையாக கையாண்டால், பிரச்சனைகள் இல்லாத சுகமான பயணத்தை அனுபவிக்கலாம். கார் குளிரூட்டி அமைப்பை முறையாக கையாள்வதன் மூலமாக பல அனுகூலங்களையும் பெற முடியும். 

எந்தெந்த நேரத்தில் கார் குளிரூட்டியை எவ்வாறு இயக்குவது குறித்த சில வழிகாட்டு முறைகளை தொடர்ந்து பார்ப்போம். 

கோடைக் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் போது கார் குளிரூட்டியை. பயன்படுத்துவதில் கவனம் தேவை. வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தியிருந்த காரை இயக்க ஆரம்பித்தவுடன் குளிரூட்டியை இயங்க செய்தால், உடனே யன்னல் கதவுகளை மூடக்கூடாது. காரினுள் இருக்கும் வெப்பம் வெளியேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

ஏனெனில் காரில் உள்ள பிளாஸ்டிக் பாகங்கள் ‘பென்சீன்’ எனப்படும் நஞ்சை உமிழ்கின்றன. இது புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது. இதனால் குளிரூட்டியை இயங்க செய்து காரினுள் இருக்கும் வெப்பக்காற்று வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு யன்னலை மூடி பயணத்தைத் தொடரலாம்.

இதேபோல நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரில் குளிரூட்டியை இயக்கிவிட்டு தூங்கக்கூடாது. ஏனெனில் கார் இயந்திரம் ஓடும்போது கார்பன் மோனாக்ஸைட் வெளியேறும். இது காருக்குள் பரவி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.

தன்னியக்க குளிரூட்டி இல்லாத காராக இருந்தால், குளிரூட்டியை இயங்க செய்தவுடன் விசிறியின் வேகத்தை அதிகமாக வைக்கவும். அதேவேளையில்,காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப குளிரூட்டி வசதி இருந்தால் ஆரம்பத்தில் மின்விசிறி வேகத்தை குறைவாக வைப்பது நல்லது. பின்னர், மின்விசிறி வேகத்தை கூட்டிக்குறைத்துக் கொள்ளவும். 

Thursday, August 30, 2018

கல்வி அமைச்சு - போட்டிப்பரீட்சை தொடர்பான அறிவித்தல்



இதற்கான முழு விவரம் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் என்பவற்றினை கீழே தரப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

விண்ணப்ப படிவத்தை பெறு இந்த இணைப்புக்கு செல்லவும்
https://www.ceylonmanjari.com/2018/08/blog-post_53.html?m=1

இந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளிக்கக்கூடாது





வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே காலை மற்றும் மாலை என்று இருவேளையும் வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

சளி காரணமாக மூக்கடைப்பு உள்ளவர்கள் சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும். 

ஆனால் ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்நீரில் குளித்தால் அந்த நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும்.

எனவே சொரியாசிஸ் மற்றும் பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருக்கும். எனவே இவர்கள் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது. இல்லையெனில் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.

நீரை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படுவதுடன், உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர கூட வாய்ப்பு உள்ளது.
குறிப்பு

சில நோயாளிகள் வெந்நீரில் துணியை நனைத்து உடலை சுத்தம் செய்வார்கள், ஆனால் அவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கிவிடும், எனவே வெந்நீரில் குளிப்பது நல்லது.

- Source: Maalaimalar

யாழ் முழுவதும் பறக்கவுள்ள சர்வதேச விமானங்கள்



யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையம் உலகத்தரம் வாய்ந்த தளமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கென 125 கோடி ரூபா செலவிடப்படும் என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் பற்றி அவர் குறிப்பிடுகையில், ஹிங்குராக்கொட விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதன்படி யாழ்ப்பாணத்தில் இந்த வானூர்தி தளம் சர்வதேச மயப்படும்போது உலகின் பெரும் எண்ணிக்கையான விமானங்கள் யாழ் வானில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இறக்கும் போது ஐந்து மாத கர்ப்பிணி: கிளிநொச்சி பெண் விவகாரத்தில் புது திருப்பம்!





கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இறக்கும்போது, அவரது ஐந்து மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார்.

உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று இரவு சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சற்றுமுன் உடற்கூறுப் பரிசோதனை நிறைவடைந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கயிறு ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார், கருவில் ஆண் குழந்தை இருந்தது என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் ஐந்து வருடங்களின் முன்னரேயே கணவனை பிரிந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளதுடன், இடதுபுற கண்ணிற்கு மேற் பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உடற்கூறுப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இறுதிக் கிரிகைகளுக்காக பெண்ணின் சடலம் தந்தையாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த பெண் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் தரவுகள், பொலிஸாரால் சந்தேகநபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கைத்தொலைபேசியின் தரவுகள், பொலிஸாருக்கு தேவையான இடங்களில் உள்ள கண்காணிப்பு கமரா காட்சிகளின் பிரதியினைப் பெறுவதற்கான கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று அனுமதி கோரப்பட்டுள்ளது.

தனிப்பட்ட உறவில் ஏற்பட்ட சிக்கல்களே கொலையில் முடிந்திருக்கலாமென்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்ததாக கூறப்படும் ஆண் ஒருவர் பொலிசாரின் சந்தேக வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

தாய்! அழகான வரிகள்!




இருவரின் கூட்டு முயற்சி,
இரண்டு நிமிட இன்பம்,
இரண்டு துளி வெண்மணி,
பயணிப்பதோ பல மணி .,

இறுதியாய் உறை வதுசூரியன் புகா நிலவறை.!
உண்டு உறங்க ஓர் அறை.!
சுவாசிக்க ஓர் உறை .!

சுதந்திரமாக வாழும் பாசச்சிறை .!!
ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை .!!
அதற்க்கு மேல் வாடகை கொடுத்தாலும்இருக்கமுடியாது என்பது பெருங்குறை .!!

கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை.!!!
விலைமதிப்பில்லாஓர் அறை .!!!
இத்தனை சிறிய ஜான் இடம்..!!!
இதற்குள் உறைவது எத்தனைபெரிய மானுடம் ..!!!!!!!

Newssle

Newssle.blogspot.com

'வீட்டில் தனியாக இருக்கிறேன் வாருங்கள்'' எனக் கூறிய இளம்பெண்... நம்பிச் சென்றவருக்கு நேர்ந்த கதி!




FACEBOOK மூலம் காதலித்து வந்த பெண்ணொருவரை நம்பி, அவரது வீட்டிற்குச் சென்ற நபரின் பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
''வீட்டில் தனியாக இருக்கிறேன். உடனே வாருங்கள்'' என தனது காதலி FACEBOOK மூலம், தனக்கு செய்தி அனுப்பியதாக பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
FACEBOOK மூலம் பழகும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பலரை நம்பி ஏமாறுவது தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த நபரின் பெறுமதி வாய்ந்த கைத் தொலைபேசியும்,பணமும் களவாடப்பட்டுள்ளன.
இது குறித்த விசாரணைகளை இந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கில் அதிகமாக சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை வன்புனர்வுகுள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் படுகிறார்கள் காரணம் என்ன?



வீரர்கள் பிறந்த  மண்ணில். அதுவும் வடக்கில் அதிகமாக துஷ்பிரயோகம் நடைபெற்ற வண்ணமே உள்ளது. அப்பாவி சிறுமிகள்,முதல் பெரியவர்கள் வரை.

தெரியாமல் தான் கேட்கிறேன். அறக்க குணம் படைத்த மிருகங்களே! நீங்கள் பிறந்த அதே மண்ணில் தானேடா அந்த மாமனிதரும் இத்தனை ஆயிரம் மா வீர மங்கைகளும் மா.வீரர்களும் பிறந்தவர்கள். 

அப்படியான கடும் யுத்த காலத்தில் ஏன் இப்படியான சம்பவங்கள் அரிதாகவே நடைபெற்றது.(பயம்) 

இப்போது மட்டும் பெண்களை நடத்தை கெட்டவள் அப்படிப்பட்டவள் இப்படி பட்டவள் என்று நீங்கள் தானே! தெரியாத ஆண்களையும் ஒரு தடவை குறித்த பெண்களை திரும்பி பார்க்க வைக்கிறீர்கள். இது மட்டும் நியாயமா? 

கண்ணியம், பெண்ணியம், என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். அப்படி இருக்கும் பெண்கள் தான் சிறந்த குலப் பெண்கள் என்று சொல்லி சொல்லியே போனால். பெண்களுக்கு நடக்கிறது. இப்படியான சம்பவங்களுக்கு. பெண்கள். முகம் கொடுக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். 

ஒரு போதும் பிறக்கும் போது கெட்டவர்களாக பிறப்பதில்லை.சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படி அமைத்து விடுகிறது. அவர்களை நடத்தை கெட்டவளாக்குவது .யார்?? நமது சமூகம்.குறித்த பெண்கள் உங்கள் ஆசைகளுக்கு இனங்காவிட்டால் அவர்களின் புகைப்படங்களை முகநூலிலும் இணையத்திலும் பதிவிடவும் செய்கிறீர்கள். பாவப்பட்ட பெண்களை தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி நமது இனத்தையும் மறைமுகமாக ஒரு சிலர் அழிக்க முற்படுவது ஏனோ? 

இன்று.வடக்கில் அதிகமாக சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை வன்புனர்வுகுள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் படுகிறார்கள் காரணம் என்ன? மது,போதைவஸ்த்து,(களியாட்டம்) என்பன அதிகமாக பாவனைக்கு வந்ததன் நிமிர்த்தமே ஒரு சில  சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை இவற்றில் மூழ்கி கிடக்கிறார்கள். 

அப்படி இவையெல்லாம் பாவிப்பவர்கள் பெற்ற தாய் தனது பெற்ற பிள்ளைகள். சகோதரிகளும் இவர்களுக்கு போகப் பொருளாகவே தெரிகிறது. 

வேறு ஒரு இனம் நமது இனத்தை
அழிக்க தேவையில்லை. நமது இனமே நமது இனத்தை அழித்துக் கொண்டு இருக்கிறது. 

நேற்று சிறுமி சிரேகா,ரெஜினா,வித்தியா இன்று இந்த பெண் நாளை யாரோ ???

பெண்களே வீரம் நிறைந்த மண்ணில் பிறந்த நாம் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை.புறப்பட்டு பொங்கி எழுந்து குரல் கொடுக்க வாருங்கள்....

பூலான் தேவியாக மாறுங்கள் யாருடைய அவச்சொல்லுக்கும் செவிமடுக்காமல் நீங்கள் நீங்களாக இருங்கள் .உங்களை நீங்கள் முதலில் நேசிக்கப் பழகுங்கள்.நமது சமூகத்திற்கு பயம் வேண்டும். ஒரு சில விடயத்தில் மட்டுமே!!!

பெண்ணே !! நீ ஒரு பூ என்பதாலும் வாய் பேசா மடந்தை என்பதாலுமே உன்னை மிதிக்க நினைக்கிறார்கள் நீ கடலாக, புயலாக மாறிவிடு😥😥😥😥

Wednesday, August 29, 2018

கிளிநொச்சியில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவந்த மேலும் சில தகவல்கள்...




கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த யுவதி யார் என தெரிந்துகொள்வதற்கு கடும் முயற்சி செய்திருந்தனர்.


இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற தடயப்பொருட்களை அடிப்படையாக வைத்து மிகவும் சாதுரியமாக செயற்பட்ட எமது ஊடகவியலாளரும், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் உயிரிழந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்திருந்தனர்.


அந்த வகையில் “முல்லைத்தீவு - முறுகண்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா” என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


எனினும் குறித்த பெண் தொடர்பில் தற்போது மேலும் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.


குறித்த பெண் கணவரால் கைவிடப்பட்டவர் என தெரியவந்துள்ளது.


மேலும், இவருடைய பிள்ளை தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய பிள்ளை மாற்றுத்திறனாளியான 5 வயதுடைய பெண் பிள்ளை என குறிப்பிடப்படுகின்றது.


மேலும் இவர் 28ஆம் திகதி மாலை 7.15 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார் என அறியமுடிகின்றது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, இந்த பெண்ணின் சடலத்தை சிறிய குட்டை ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவரே முதலில் கண்டு கிளிநொச்சி பொலிஸாருக்கும், கிராம அலுவலருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்





ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் வழுக்கை தலையைப் பெறுவது. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் முடி உதிர்வது ஒருசில நோய்களுக்கும் அறிகுறியாக இருப்பதால், உடனே கவனிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு தான் வழுக்கை தலை சீக்கிரம் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் பரம்பரை, ஊட்டச்சத்து குறைபாடு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் பரம்பரை காரணமாக ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போட முடியும்.

அதுவும் ஒருசில செயல்களைப் பின்பற்றுவதன் மூலம், மயிர்கால்களை வலுவுடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதில் முதலில் செய்ய வேண்டியது வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், போதிய முடிக்கான பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும்.

ஆயில் மசாஜ் :-

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேங்காய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய்களைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமானால் இரண்டு மூன்று எண்ணெய்களை ஒன்றாக சேர்த்தும் முடிக்குப் பயன்படுத்தினால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

தேங்காய் பால் :-

தேங்காய் பால் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், அது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுத்து, அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். இந்த முறையை ஆண்கள் தவறாமல் வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மருதாணி இலைகள் :-

மருதாணி இலையில் கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை. இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்க வல்லது. அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதன் மூலம் முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.

நெல்லிக்காய் :-

முடி வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது முடி உதிர்வதை உடனே தடுத்து நிறுத்திவிடும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, அதனை இரவில் படுக்கும் போது, தலையில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரித்து, வழுக்கை ஏற்படாமல் இருக்கும்.

வெந்தயம் :-

வெந்தயம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த உதவுவதில்லை. முடி உதிர்வதைத் தடுக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் வெந்தயத்தில் ஆன்செடென்ட்ஸ் என்னும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பாதிப்படைந்த மயிர்கால்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு அவசியமான புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் ஆசிட் உள்ளது. எனவே வாரம் ஒரு முறை வெந்தயத்தில் நீரில் நன்கு ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும்.

வெங்காய சிகிச்சை :-

வெங்காயத்தில் முடி உதிர்வதைத் தடுக்கும் சல்பர் என்னும் பொருள் உள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதுடன், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே வாரம் 1-2 முறை வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து, தலையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தொலைக்காட்சி பெண் நிருபர் கொடூரமான முறையில் கொலை...பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!



 

பங்களாதேசில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் நிருபர் ஒருவர் கொடூரமான முறையில் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆனந்தா தொலைக்காட்சிசேவையில் நிருபராக பணியாற்றி வந்த 32 வயதான சுபர்னா அக்டெர் நோடி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மேலும், நாளிதழிழ் ஒன்றிலும் நிருபராக உள்ள இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதுடன் தனது 9 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்ற சுமார் பத்து பேர் கொண்ட குழு ஒன்று கூரிய ஆயுதங்கள் தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் நிருபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்ற இன்று உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் அவரது முன்னாள் கணவரும் இருந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனின் மகனின் மோட்டார் வாகனம்



தமிழர் தலைநகரான திருகோணமலையில் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் என்டடியால் பாவிக்கப்பட்டதாக கூறப்படும் மோட்டார் வாகனம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
All Terrain Vehicle(ATV) எனப்படும் இந்த மோட்டார் வாகனமும், அதன் விபரங்களும் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வாகனத்தை அட்மிரல் ஜெயந்த கொலம்பகே முல்லைத்தீவு கடற்படை தளத்திற்கு ஒப்படைத்து, பின்னர் கிழக்கு மாகாண கடற்படை தலைமையக அருங்காட்சியகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
40” அகலமும், 77” நீளமும், 43” உயரமும் கொண்டு குறித்த மோட்டார் வாகனம் காணப்படுகின்றது.
இங்கு வரும் பலரும் குறித்த மோட்டார் வாகனத்தை பார்வையிட்டு செல்வதுடன், புகைப்படங்கள் எடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. 

LAST UPDATE! கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்: ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்!






கிளிநொச்சியில் இன்று மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வசந்தநகரை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான நித்தியகலா (வயது 32) என்பவேரே கொல்லப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை நிறுவனமொன்றில் பாதுகாப்பு பணிபுரிந்து வருகிறார்.

ஐந்து வருடங்களின் முன்னரே இவரும் கணவரும் பிரிந்து விட்டனர். தாயார் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தந்தையுடன் (கருப்பையா) வாழ்ந்து வருகிறார். அவர் திருமுறிகண்டியில் கடை நடத்தி வருகிறார்.

NEW UPDATE !இன்று கிளிநொச்சியை உலுக்கிய கொலை: உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவரும் முக்கிய தகவல்கள்!


கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைத்திவு திருமுருகண்டி வசந்த நகரை சேர்ந்த, 32 வயதான கருப்பையா நித்தியாகாலா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் அதன அடிப்படையில் அப்பகுதிக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சடலம் கிடந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சடலத்தின் அருகிலிருந்து சிவில் பாதுகாப்பு படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


LAST UPDATE! கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்: ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்!

NEW UPDATE !இன்று கிளிநொச்சியை உலுக்கிய கொலை: உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவரும் முக்கிய தகவல்கள்!


UPDATE: கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, வயலுக்குள்ளால் இழுத்து செல்லப்பட்டாரா கிளிநொச்சி யுவதி?

UPDATE: கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, வயலுக்குள்ளால் இழுத்து செல்லப்பட்டாரா கிளிநொச்சி யுவதி?






கிளிநொச்சியில் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யுவதி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என நம்புவதற்கு வலுவான ஏதுநிலைகள் காணப்படுவதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பண்ணங்கண்டி பிரவுன் ரோட் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் இன்று(29) காலை இளம் யுவதி ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருந்தது. யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் கொண்டு சென்று போடப்பட்டிருக்கலாம் என நம்பும்படியான முதற்கட்ட தடயங்கள் கிடைத்துள்ளன.


சடலத்தில் உள்பாவாடை, பிற்சோற்ஸ், வெஸ்ட், பிரா போன்ற ஆடைகள் மாத்திரமே காணப்படுகின்றன. மேலாடைகள் எதுவுமே காணப்படவில்லை.
அத்தோடு காதில் தோடும் காணப்பட்டுள்ளன.

சடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் சிவில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்சள் நிறங்களில் செருப்புக்கள் இரண்டு சோடி, கால் சங்கிலி, சிவப்பு பேனை ஒன்று நீல பேனை ஒன்று போன்ற சான்றுப்பொருட்கள் காணப்பட்டுள்ளன.

மேலும் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் கழுத்தில் கறுப்பு அடையாளம், முகம் சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளது்

அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல்கள் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கும் விதமாக சடலத்தின் கால்களில் கரி படிந்திருக்கிறது. அத்தோடு சடலம் காணப்படும் இடத்தின் சூழலில் சிதறி கிடக்கும் சான்றுப்பொருட்களை அவதானிக்கின்ற போது குறித்த பகுதியில் கடலமாக காணப்படும் யுவதிக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் இடையே முரண்பாடுகளும், இழுபறிகளும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது


சம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டுள்ளார். அத்தோடு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி தடயவியல் பொலீஸார் உட்பட பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.















இன்று கிளிநொச்சியில் இன்னொரு வித்தியா!




பெண்கள் பலாத்காரம்

#தொப்புள் ..
நீயும்நானும் உலகிற்கு வந்த முதல் தொப்புள் கொடி…
#மார்பகம்…
நீயும்நானும் உயிர் வாழ சாப்பிட்ட ஆரம்ப அமிர்தம்..
#இடுப்பு…
நீயும்நானும் ஏறி உட்கார பழகிய இடம்…
#உதடு…
நீயும்நானும் முதன் முதலில் முத்தங்களை பரிமாறிய இடம்…
#தொடை…
நீயும்நானும் முதன் முதலில் குளிக்க பழகிய இடம்…
#அண்டம்…
நீயும்நானும் இந்த உலகிற்கு வெளியே வரும் ஒரு வழி…
#கன்னம்..
நீயும்நானும் கண்ணம் வைத்து கண்ணம் தேய்த்து விளையாடியஇடம்
#முதுகு…
நீயும்நானும் உப்பு மூட்டை தூக்கி விளையாடிய இடம் …
இப்படி பெண்களின் அங்கங்கள் எல்லாம் நீயும் நானும் பழகிய இடங்களே என்று
ஓர் நிமிடம்
அறிந்தால்
உணர்ந்தால்
எந்த கற்பழிப்பும்
எந்த பலாத்காரமும்
எந்த பால்ய அத்துமீறலும்
நடக்காது…
சின்னஞ்சிறு
பிஞ்சு குழந்தைகளை,
பள்ளியில்படிக்கும்
இளம் மொட்டுகளை,
திருமணமான
குடும்ப பெண்களை,
வயதான கிழவிகள்
முதல்…
காம இச்சைகளை
தீர்த்துக்கொள்ள
கற்பழித்துகொல்லும்
வெறி பிடித்த ஓநாய்களே
நீங்கள் பார்க்கும் பெண்களின்
அங்கங்கள் மேலே
சொல்லும் காரணத்துக்காக படைக்க பட்டுருக்கின்றன..
உனக்காக
நீ பார்த்து ரசிப்பதற்காக
நீ புசித்து உண்பதற்காக
நீ கிழித்து நாறடிப்பதற்காக
அல்ல அல்ல அல்ல….
உன் மனைவியை
தவிர்த்துமற்ற
பெண்களை
தாயாக
சகோதரியாக
மட்டுமே பார்த்து
பழகினால் கற்பழிப்பு
என்றஎண்ணமே
#வராது……🙏🙏

யாழில் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் குடும்பத்தாருக்கு ராணுவத்துடன் சேர்ந்து அரசு செய்த உதவி! என்னவென்று தெரியுமா?




யாழில் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் குடும்பத்தாருக்கு  ராணுவத்துடன் சேர்ந்து அரசு செய்த உதவி! என்னவென்று தெரியுமா?

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் சார்பில் அவரது தாயாருக்கு வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டதற்கு அமைய மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதனால் இன்று (புதன்கிழமை) குறித்த வீடு கையளிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த நிலையில், குறித்த இருவரது குடும்பத்தாருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் அமைச்சு உறுதியளித்திருந்தது.


அதற்கமைய முதற்கட்டமாக கிளிநொச்சியில் வசிக்கும் நடராஜா கஜனின் தாயாருக்கு இன்று வீடு கையளிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் உயிரிழப்பு அவர்களது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக விளங்குவதால், இவ்வுதவியானது அவர்களது வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமைச்சின் 13 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தின் உதவியுடன் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்றாக உயிரை விட்ட தமிழ், சிங்கள நண்பர்கள்! ஒரே புதைகுழியில் புதைப்பு - நெகிழ்ச்சியில் தென்னிலங்கை மக்கள்



ஹம்பாந்தோட்டையில் உயிரிழந்த தமிழ் - சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் மற்றும் சிங்கள நண்பர்கள் இருவரும் நேற்று ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளனர்.
அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் குறித்த இருவரும் புதைக்கப்பட்டுள்ளனர்.
அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன் மற்றும் காலி நெழுவ பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திர ஷிவகுமார் என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தின் ஒரே இடத்தில் தொழில் செய்த நண்பர்களாகும்.
குறித்த இருவரும் கடந்த 25ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் இரவு 11.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
தமிழ் இளைஞர் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இரண்டு நண்பர்களினதும், இறுதி நடவடிக்கை ஒரே நாளில் ஒரே குழியில் புதைப்பதற்கு உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.
தென்னிலங்கையில் இனவாத ரீதியான மோதல்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இவ்வாறான துன்பியல் நிகழ்விலும் நல்லிணக்கம் பேணப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்னர்.

யாழ்பாணத்தில் மூவருக்கு தலா 5 ரூபாய் அபராதம் கொடுத்த நீதிமன்றம்! காரணத்தை கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள்



யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.
மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும்.
எனினும், யாழ்ப்பாண பொலிஸாரால் 1866ஆம் ஆண்டு பொலிஸ் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால், குற்றவாளிகள் மூவரிடமும் தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது

Tuesday, August 28, 2018

நாவல் மருந்துவ பயன்கள்:




*இதன் துவர்ப்பு குருதியை அதிகரிக்கச் செய்யும்.
*இதன் வித்து நீரிழிவை தடுக்கும்.
*விதையை தூள் செய்து 2முதல் 4கிராம் அளவு தினமும் உட்கொள்ள,நாளடைவில் நீரிழிவு நோயில் சர்க்கரை அளவு குறையும்.
*பட்டை கசாயத்தில் வாய் கொப்பளித்தால் வாய்புண் ஆரும்.
*நாவள் தளிரை அரைத்து சிறு குழந்தைகளுக்கு மேலே பூசி குளிப்பாட்ட வெப்பத்தாக்குதள் குணமாகும்.
*இதயத்துக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்.
*ஆசன எரிச்சல் தீரும்

பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் மையப் பகுதியில் 126 பேர் அதிரடிக் கைது?



லண்டனில் வங்கி விடுமுறையின் வார இறுதிநாள் கொண்டாட்டத்தின் போது, பல்வேறு விதமான ஒழுங்கு நடவடிக்கை செயல்களில் ஈடுபட்டதாக 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி விடுமுறையை கொண்டாடும் விதமாக Notting Hil பகுதியில் கடந்த இரண்டு பிரமாண்டமான திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு வண்ணங்களில் உடை அணிந்து வருகை தந்திருந்தனர்.
கடந்த சில வாரங்களாகவே லண்டன் நகரத்தை வாட்டி வதைத்த வெளியிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக பெய்த மழையால் பொதுமக்கள் பலரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். 
பலரும் மழையை கொண்டாடும் விதமாக நனைந்துகொண்டே விழாவை கண்டு மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் அசம்பாவிதங்கள் நிகழப்போவதாக வந்த உளவுத்துறை தகவலை அடுத்து, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 13 ஆயிரம் ஸ்காட்லாந்து பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்பொழுது நடத்தப்பட்ட சோதனையில், கத்தி வைத்திருந்தவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் என 126 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது மிகவும் கொடூடராக மேற்கொள்ளப்பட்ட கொத்தடிமைத்துவத்திற்கு எதிராக கறுப்பு இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நொட்டிங்கில் கேட் காணிவெர்ல் என்று பிரபல்யமான நிகழ்வில் இந்த கைதுகள்இடம்பெற்றிருக்கின்றன.
புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் லண்டன் மாநகரின் மையப் பகுதியிலேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் தமிழர்களுக்கு எந்தவதப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் வீட்டில் பிள்ளைகளுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!



திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர், திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் தன்னுடைய மனைவி நதியா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பூபாலன், வழக்கம்போல நேற்றைக்கும் கிளம்பி வேலைக்குச் சென்றுவிட, மனைவி நதியா மட்டும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அந்த வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளன. இதனைக் கண்ட பூபாலனின் சகோதரர் ஜீவா, அந்த வீட்டுக்குள் சென்று பார்த்திருக்கிறார். அப்போது, உள் அறைக்குள் நதியா கொடூரமாக கொலைசெய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், நதியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், கொலை நடைபெற்ற வீட்டிலிருந்து பணம், நகை போன்றவை திருடப்படவில்லை என்ற தகவலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தற்போது நதியாவின் மரணம் குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

அகால மரணத்தைக் கூட முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்!.. உங்களுக்குத் தெரியாத பல ரசியங்கள் இதோ



மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது வழக்கத்தில் உள்ளது.
இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்.
காக்கைபாடினியார் எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் கூறியுள்ளார். அவை, பயனத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன் லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும். பயணிக்கும் அன்பரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால் பயணம் இனிதாகும்.
ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால் பயணத்தின்போது அவருக்கு அகால மரணம் நேரிடலாம்.
அதே நேரம் பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால் அந்த பயணத்தால் பலவிதமாக தன லாபம் ஏற்படும்.வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால் பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.
ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு என அறியலாம்.
காரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பும் காகம் பஞ்சம், வரப் போவதையும், காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும் இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும்.
ஒருவரின் மேலே படும் காகம் அவருக்கு உடல் உபாதை நேருதலை குறிக்கும்.காகங்கள் கூட்டமாக ஒடு ஊரின் மேலாகப் பறப்பது அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.

ஜெர்மனியில் வன்முறை வெடித்ததில் பலர் காயம்


ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.
உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அரசு ஆதரவு அளித்து வருகின்ற நிலையில் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிழக்கு ஜெர்மனியின் செமின்ட்ஷ் நகரில் நடந்த மோதலில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அதைதொடர்ந்து அகதிகளுக்கு எதிராக செமின்ட்ஷ் நகரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை அடக்க காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்ட போதும் முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கினார்கள்.
அதேசமயம் மற்றொரு குழுவினர் எதிர்போராட்டம் நடத்திய நிலையில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் திடீரென்று கரடியாக மாறிய கல்!



முல்லைத்தீவில் திடீரென்று கல் ஒன்று கரடியாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் வடக்கே உள்ள காடொன்றில் கல் ஒன்று கரடியாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளது.
இரவு முல்லைத்தீவைச் சேர்ந்த இரு வேட்டைக்காரர்கள் பெருங்காட்டிற்கு வேட்டைக்காகச் சென்றுள்ளனர்.
இதன்போது காட்டில் உள்ள சிறு குட்டைக்கு அருகில் உள்ள மரம் ஒன்றிற்குப் பின்னால் இருவரும் மறைந்து நின்றுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு வேட்டைக்காரர் மரத்திலிருந்து வெளிப்பட்டு குட்டையின் அருகே இருந்த கல் ஒன்றில் இருப்பதற்காக சென்றுள்ளார்.
கல்லுக்கு அருகே சென்றதும் அதன்மீது அமர்ந்தபோது அந்த கல் திடீரென்று அசைய ஆரம்பித்ததும் பதறியடித்து ஓடியுள்ளார்.
அப்பொழுதுதான் அது கல் அல்ல உறங்கிக்கொண்டிருந்த கரடி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவருடன் வந்த மற்றொரு வேட்டைக்காரர் உடனடியாக சுதாரித்து தனது வேட்டைத் துப்பாக்கியை இயக்கியதும் குறித்த கரடி காட்டுள் ஓடி மறைந்தது.
எவ்வாறாயினும் கரடி மீது அமர்ந்தவர் தெய்வாதீனமாக அதன் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் மனைவியை கடத்தி தப்பிச் சென்ற கணவர்



காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் தடுப்பில் இருந்து தமது மனைவியை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற கணவர் ஒருவர் குறித்த தகவல், மாவனெல்ல– ரந்திவல பகுதியில் பதிவாகியுள்ளது.
ரந்திவல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்து வந்தமை தொடர்பில் 30 வயதான பெண் ஒருவர் நேற்று, நாரம்பெத்த விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்தப் பெண் சோதனைக்கு உள்ளாக்கப்படும் போது, அவர் வெளி நபர் ஒருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து குறித்த பிரதேசத்துக்கு பிரவேசித்த உந்துருளி ஒன்று, விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரை மோதியுள்ளது.
மோதுண்டவருக்கு உதவியளிக்க ஏனைய அதிகாரிகள் சென்ற வேளையில், உந்துருளியில் பிரவேசித்தவரும், சந்தேகத்துக்குரிய பெண்ணும் அதிரடிப்படை முகாமின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற 42 வயதான ஆண் மாவனெல்ல அருகில் உள்ள பிரதேசம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் சந்தேகத்துக்குரிய குறித்தப் பெண் இன்னும் கைதாகவில்லை.

பிரபாகரன் புகைப்படத்துடன் வாகனம் இயங்கியதால் மோப்ப நாயை பயன்படுத்திய கேரள அரசு! வெளியான பகீர் தகவல்



கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் புகைப்படத்துடன் உதவிப் பொருள்களை வழங்கச் சென்ற வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உதவிப் பொருள்களை கொண்டு சென்ற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஒத்த கொடி காணப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் நிழல்படமும் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு பொருள்களைக் கொண்டு சென்றுள்ளனர்.குறித்த வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் சில பகுதிகளுக்கு இந்த உதவிப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அவற்றை வெடிகுண்டுகள் மற்றும் மோப்பநாய் பரிசோதனைகளுக்காக கேரள பொலிஸார் அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள்இ றைவன்சி வபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள் மற்றும் அதன் வரலாற்றை காண்போம்.





புலி சிவபெருமானை வழிப்ட்ட தலம்-திருப்புலிவனம்.

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனத்தில்  திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் சிவபெருமான் அருள்கிறார்.

சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.

🕉பசு சிவபெருமானை வழிபட்ட தலம்-சங்கரன் கோவில் 🍊 

நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன் கோவிலில் அம்பிகை தேவர்கள் சூழ்ந்திருக்க சிவனை வழிபட்டிருக்கிறார்.கோ எனும் பசு வழிபட்ட்தால் அம்பிகை கோமதி என அழைக்கப்படுகிறாள்

🕉சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவானைக்காவல்

திருச்சிராப்பள்ளியில் காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது.

இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில்,மழையில் கிடந்தது.

சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில்.மழை,மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது.

யானை தன் துதிக்கை மூலம் காவேரி ஆற்றில் நீரும்,பூவும் கொண்டுவந்து வழிபட்டது.யானை சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும்.

சிலந்தி மீண்டும் வலைபின்னி வழிபாட்டை தொடரும்.யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன.

இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன் யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார்.சிலந்தி மறுபிறவில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தது.

� 🐜எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவெறும்பூர்

அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம்.🐝🐝 

திருச்சி மாவட்டம்,திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் பிரசாததை எறும்புகள் எடுத்துக்கொள்கிறது.

🕉 ஈ - வடிவில் அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலம் -திரு ஈங்கோய்மலை.

திருச்சி மாவட்டம், தொட்டியம் to முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ளது திரு ஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை)

🕉பாம்புக்ள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருப்பாம்புரம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேசன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.

🕉அணில்,குரங்கு,காகம் -சிவபெருமானை வழிபட்ட தலம்-குரங்கணில் மூட்டம்.

சாபத்தால் காகமாக மாறிய எமனும்,அணிலாக மாறிய இந்திரனும்,குரங்காக மாறிய வாலியும் இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் மாமண்டூர் எனும் இடத்தில் உள்ளது.

🕉மயில்-சிவபெருமானை வழிபட்ட தலம்-மயிலாடுதுறை

சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை சிவனை வழிபட்ட தலம்.

🕉கழுகு சிவபெருமானை வழிபட்ட தலம்-திருக்கழுக்குன்றம்.

நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருகின்றன.

🕉வண்டு-சிவபெருமானை பூஜித்த தலம்-திருவண்டுதுறை.

திருவாரூர் மாவட்டம்,திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார்.

இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.

🕉நண்டு-சிவபெருமானை வழிபட்ட தலம்-நண்டாங்கோவில்.

சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன் இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். 
இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.

🕉சக்ரவாகப் பறவை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருச்சக்கராப் பள்ளி.

தஞ்சாவூர் மாவட்டம்,திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.

🕉யானை-சிவனை பூஜித்த தலம்-திருக்கொட்டாரம்.

துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.

🕉பசு-சிவனை வழிபட்ட தலம்-பட்டீஸ்வரம்.

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டீஸ்வரத்தில் காமதேனு என்ற பசுவின் மகளான பட்டி என்ற பசு வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

🕉ஆமை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருக்கச்சூர்

இங்குள்ள சிவனை வழிபட்டு திருமால் மந்தார தாங்குவதற்கு( கூர்மமாக)தேவையான சக்தியை பெற்றுள்ளார்.

🕉கிளி வழிபட்ட தலம்-சேலம் சுகவனேஸ்வரர்.

கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவன் சேலத்தில் சுகவனேஸ்வரராக அருள்கிறார்.

🕉சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம்-வட குரங்காடுதுறை.🌳 

தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இங்குள்ள சிவன்.

அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

🕉இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சளைத்தவை அல்ல விலங்குகள்.

அதன் காரணம் தேவர்களோ,முனிவர்களோ தான் பெற்ற சாபத்திற்க்கு விலங்காக மாறி சிவபெருமானை வழிபட்டிருக்கிறார்கள்.

இது வெறும் கதை அல்ல.உண்மையில் நடந்த சம்பவத்திற்கான வரலாறு இருக்கிறது.

சில உயிரினங்கள் தன்னை அறியாமலே இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளன.

🕉 இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் விலங்குகள் இறைவனை வழிபட்ட தலங்கள் பலவற்றை அறிய முடியும்.

🙏🙏 ஓம் நமசிவாய🕉

இந்தியாவின் ரத்தினமான பாரத ரத்னா விருதை மஹிந்தவுக்கு வழங்க வேண்டும்!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் டெல்லி விஜயம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சுப்ரமணியன் சுவாமி பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவிற்கு ஏனையோரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாகவே சுப்ரமணியன் சுவாமி பாரத ரத்னா விருதை மஹிந்தவுக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
“தனது மக்களுக்காக போராடி விடுதலையை பெற்றுக்கொடுத்த நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைப் போன்று, தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஸவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.”
பாரத இரத்தினம் அல்லது பாரத ரத்னா விருது என்பது இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.
மேலும், வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகளான அன்னை தெரசாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, August 27, 2018

தமிழர் பகுதியில் 34 வருடங்களின் பின் நிகழ்ந்த சம்பவம்..



பொத்துவில் பகுதியில் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு 60-ஆம் கட்டை பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அங்கிருந்த பிள்ளையார் சிலையொன்றும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது பூர்வீக நிலங்களில் குடியமர்வதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொத்துவில் தமிழ் இளைஞர்களும், கனகர் கிராம மக்களும் இணைந்து, எடுக்கப்பட்ட பிள்ளையார் சிலையை நேற்று மாலை மீண்டும் குறித்த பகுதியிலேயே வைத்துள்ளனர்.

இதன்போது பிள்ளையார் சிலை, முன்பு வைக்கப்பட்டிருந்த அதே இலுப்பை மரத்தடியில் வைக்கப்பட்டு பொங்கல் படைத்து வழிபடப்பட்டுள்ளது.

மேலும் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரை காண பெருந்திரளான பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Page 2 of 2

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job