பெரும்பாலும் நிறைய வீடுகளில் இருக்க கூடிய செடி செம்பருத்தி. இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அக்குணங்களைப் பற்றி காண்போம்.
செம்பருத்தி இலைகள் நம் உடலுக்கு குளுர்ச்சியைக் கொடுக்கின்றது. கருமையாக கூந்தல் வளர வேண்டுமாணால் செம்பருத்தி பூவை அறைத்து அதனுடைய சாறை எடுத்துக் கொண்டு அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணையை கலந்து வானிலியில் போட்டு காய்ச்சி வடி கட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு அதை தினமும் காலையில் தலையில் தேய்த்து வர முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும் .
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் ஏற்படும் இதற்கு வீட்டிலயே எளிதாக மருந்து தயாரிக்கலாம். நான்கு செம்பருத்தி இலைகள் அல்லது நான்கு செம்பருத்தி மொட்டை இரண்டு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அதில் இனிப்புக்காக சிறிது கற்கண்டு கலந்து பருகி வர அப்பிரச்சனை சரியாகும்.
பெண்களுக்கு பெரும்பாலும் வரும் ஒரு பிரச்சனை மாதவிடாய். மாதவிடாய் சரியாக வராமல் இருத்தல், அடி வயிற்று வலி, இடுப்பு வலி என்று பலப் பிரச்சனைகள் வரும். இதற்கு நான்கு செம்பருத்தி பூக்களை அரைத்து பேஸ்ட் போல் வைத்துக் கொண்டு தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சரியாகும் . அல்லது செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி அரைத்து வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.
இதை தொடர்ந்து 7 நாட்கள் செய்ய வேண்டும் .
இருமல் பிரச்சனை விரைவில் குணமடைய செம்பருத்தி பூ இதழ் 15 எடுத்துக் கொண்டு அதனுடன் ஆடாதுடைதளிர் இலைகள் மூன்றை சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி வடி கட்டி அதனுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலை மாலை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வர இப் பிரச்சனை குணமடையும் .
இதய நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து செம்பருத்தி பூ. செம்பருத்தி பூவை காய வைத்து அறைத்து பொடி செய்து அதை பாலில் போட்டு காலை மாலை குடித்து வர தங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும் .
0 comments:
Post a Comment