வயிற்றுவலி, தலைவலி, அஜீரணம் தீர வேண்டுமா... கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? வெளிநாட்டினருக்கு இன்ஸ்டன்ட் கஷாயமாகப் பயன்படுவது ஆப்பிள் சிடர் வினிகர்தான். ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் ஒன்று இது. நம்மூர் சூப்பர் மார்க்கெட்டில்கூட நாம் இதைப் பார்த்திருப்போம். ஆனால், பலரும் இதை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டிருப்போம். ஆப்பிள் ஆயுளைக் கூட்டும் என்றால், ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்த இந்த ஆப்பிள் சிடர் வினிகர் தரும் பலன்கள் ஒன்று, இரண்டல்ல... ஏராளம்! அவை... இரைப்பை அழற்சி, வீக்கம், அஜீரணம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இது குடலின் இயக்கங்களை ஊக்குவிப்பதால் மலச்சிக்கல் நீங்கும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்துவர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும் .
* இது மூக்கடைப்பையும் சரி செய்யும். அத்துடன் மூக்கிலுள்ள மியூகஸை உடைத்து சைனஸைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் 5 மி.லி அளவுக்கு வெறும் ஆப்பிள் சிடர் வினிகரை மட்டும் கலந்து குடித்தால் சைனஸ் குறையும்.
* அமில இயல்புகளைக்கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும். காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும். இப்படிச் செய்துவர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். ஆனால், இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது .
குறிப்பு:
Apple cider vinegar வாங்கும் போது (Natural) unfiltered ஆ பார்த்து வாங்கவும்.
0 comments:
Post a Comment