ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.
உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அரசு ஆதரவு அளித்து வருகின்ற நிலையில் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிழக்கு ஜெர்மனியின் செமின்ட்ஷ் நகரில் நடந்த மோதலில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அதைதொடர்ந்து அகதிகளுக்கு எதிராக செமின்ட்ஷ் நகரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை அடக்க காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்ட போதும் முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கினார்கள்.
அதேசமயம் மற்றொரு குழுவினர் எதிர்போராட்டம் நடத்திய நிலையில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment