அன்புக் குழந்தையே..
கஷ்டம் என்பது எல்லாருக்கும் வருவது. அதன்
பிடியில் இருந்து யாரும் தப்புவதில்லை.
இதை நீ தெரிந்தும் உணராமல் இருக்கிறாய்.
மற்றவர்களுக்கு கஷ்டம் என்றால் முன்னாள் ஓடிப்போய் ஆறுதல் சொல்வாய்.
இப்போது உனக்கு கஷ்டம் என்ற நிலை வந்ததும் ஆற்றாமல் என்னென்னவோ நினைத்துக்கொண்டு இருக்கிறாய்.
பிறந்தது முதல் இதுவரை எண்ணற்ற தொல்லைகளுடனும் கஷ்டங்களுடனும் வாழ்கிறேன்,
என்னை மீட்பார் யாருமில்லையே என புலம்புகிறது உன் மனம்.
எப்போது இந்த செய்தி உன் கண்களில் பட்டதோ அப்போதே நீ விடுதலையின் படியில் காலை வைத்துவிட்டாய் என்பதை உறுதியாக நம்பு.
இதுவரை இப்படி எதுவும் உன் கண்களில் படவில்லையே.
இப்போது இந்தச் செய்தி உன் மனதில் நிற்கிறதே அப்படியானால் உனக்கு விடுதலை உறுதியல்லவா.
அனைவர் மீதும் கருணைகொண்ட இந்த பக்கீர் அன்புடன் உன்னையும் பாதுகாப்பான்.
இப்போது நீ பிரச்சனைகள் தடங்கல்கள் எனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்.
துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம். அதைப் பற்றி வருத்தப்படாதே.
அமைதியாயிரு, பொறுமையை கடைபிடி.
கவலையை விட்டொழி. உனது துக்க நாட்கள் முடிந்து போயின.
எனது இந்த வார்த்தையை நமபி, என் மீது விசுவாசம் கொள்.
மனம் புண்ணாகி போனதே என வருந்தாதே.
என் மென்மையான கரங்களால் உன்னை வருடிக்கொண்டு உன் பக்கத்தில்தான் நான் உனக்காக இருக்கிறேன்.
நீ விரைவில் அனைத்து இன்பங்களையும் பெறுவாய், உனது வேண்டுதல் கேட்கப்பட்டது. அது நிறைவேறிய தீரும்...
ஓம் ஸ்ரீ சாய் ராம்...
0 comments:
Post a Comment