நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, August 26, 2018

வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்!





உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாயுத் தொல்லையினால் அவதிப் படுகிறார்கள். இது ஒரு வியாதி அல்ல; ஆனால் ஒரு வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுக்கும் மார்பிற்கும் நடுவே வலி – சில சமயங்களில் மார்பை அடைப்பது போன்ற உணர்வு இவையெல்லாம் வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் காணப்படும்.

நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம். உணவு நம் இரைப்பைக்குள் சென்று அங்கு பலவிதமான செரிமான நீர்களுடன் கலந்து செரிக்கப் படுகின்றன. அவ்வாறு செரிக்கப்படாத உணவின் மிச்சங்கள் பெருங்குடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது.

#வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்!

* வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சுக்கு மல்லி(தனியா) கசாயம் வாயுக்கு நல்லது.

* பசும்பாலில் 10 பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் வாயு சேராது.

* இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும்.

* புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி, இதனுடன் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சாப்பிட்டு  வர வாயு அகலும்.

* வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்கீரை போன்ற கீரைகள் வாயுவைப் போக்கும்.

* சமைக்கும் போது இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

* முடக்கற்றான் கீரையை கைப்பிடி அளவு 1 கோப்பை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

* தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை  நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

* ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப் பத்திரி, வெங்காயம் போன்றவைகளும் வாயுவைப் போக்கும்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job