இரண்டரை அடி உயரம் மட்டுமே உடைய குப்பைமேனி ஒரு களைச் செடி ஆகும், தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும் சாதாரணமாக பரவிக் காணப்படும், ஆனால் இதன் நன்மைகளோ ஏராளம்.
மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் வாந்தி, பேதி போன்றவற்றிலிருந்து ஒரு நிரந்தர தீர்வை தருகின்றது.
மந்தம், அஜீரணம், உடல்வலி, கண்நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது, இதற்கு பூனை வணங்கி என்ற வேறு பெயரும் உண்டு.
குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும்.
குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வந்தால் நீண்ட காலமாக உள்ள தோல் நோய்கள் குணமாகும்.
குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து 48 நாட்கள் உண்டு வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
இதன் இலையை சிறிதளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் கட்டுப்படும்.
முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் புள்ளிகளை மறைய வைக்க குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.
குப்பைமேனி இலைச்சாறுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதனை ஒரு வாணலியில் இட்டு சுண்டக்காய்ச்சி, வடிகட்டி கிடைக்கும் எண்ணெயை மூட்டுவலியுள்ள பகுதிகளில் இதனை நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும்.
தினமும் 10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் உண்டாகும்.
இதனை சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்கு தொண்டையில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு வாந்தியினால் வெளியேறும்...... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்...... ஓம் நமசிவாய ......பார்த்திபன் குட்டி 8870608700
0 comments:
Post a Comment