நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 22, 2018

"நம்ம பிள்ளைதான்" என்றார் மனைவி பெற்றோர்களே இன்றைய நவீன உலகத்தில் பிள்ளைகளுடனும் சற்று நேரத்தை செலவழியுங்கள்




ஓர் ஆசிரியை அன்றைய இரவுச் சாப்பாடு முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார் 
அவருடைய கணவர் அவருக்கு எதிரே ஒரு மேசையிலமர்ந்து தன் கையிலிருந்த ஸ்மார்ட்போனை நோண்டிக்கொண்டிருந்தார் சிறிது நேரம் போனது அவர் எதேச்சையாகத் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார் கண்களில் நீர் திரள தன் கையிலிருந்த ஒரு விடைத்தாளையே பார்த்துக்கொண்டிருந்தார் ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட கணவர் அவரருகே சென்று

ஏய்... என்னாச்சு என வினவினார்

நேற்று  நாலாம் வகுப்பு  படிக்கிற பிள்ளைகளுக்கு ஒரு வீட்டுப்பாடம்  கொடுத்திருந்தேன்
 "என்னோட ஆசை"என்னும் தலைப்புக் கொடுத்து  உங்கள் ஆசைகளை  எழுதிட்டு வாங்க என்று  சொல்லியிருந்தேன்,

சரி  அதுக்கும் நீ கண்கலங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? 
நீ கையிலவெச்சிருக்குற பேப்பர்ல அப்படி என்ன எழுதியிருக்கு என்று கேட்டார் கணவர்
படிக்கிறேன்  கேட்குறீங்களா

தலையசைத்தார் கணவர் 
ஆசிரியை படிக்க ஆரம்பித்தார்  அதில் ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்  

"நான் ஒரு ஸ்மார்ட்போண் ஆகணும் என்கிறதுதான் என்னோட ஆசை 
 ஏன் என்றால்  என்னோட அம்மா, அப்பாவுக்கு ஸ்மார்ட்போன் மிகவும் 
பிடித்திருக்கு சில நேரங்களில் என்னை கவனித்துக் கொள்வதைக்கூட மறந்துவிட்டு ஸ்மார்டபோனை அவ்வளவு நன்றாக கவனித்து கொள்கின்றார்கள் அப்பா அழுவலகத்திலிருந்து களைத்துப் போய் வருவார் 
என்னுடன் கதைப்பதர்க்கு நேரம் இல்லாவிட்டாலும்  போனில்  பேசுவதர்க்கு அவருக்கு நேரமிருக்கும்  அம்மாவும் அப்பாவும் எவ்வளவு  வேலையில இருந்தாலும்  போன் ஒரு ரிங் அடித்தால் ஓடோடிச் சென்று எடுத்து பேசிக்கொள்கின்றார்கள் 
 பல நேரங்களில்  நான் சத்தமாக் கூப்பிட்டாலும்  திரும்பிப் பார்க்கின்றார்கள் இல்லை  ஸ்மார்ட்போனில் கேம் விளையாடுறாங்களே தவிர  என்கூட அதிகமா விளையாடுவதில்லை அவகள்  யாருடனாவது போனில்  கதைத்து கொண்டிருக்கும்போது  எவ்வளவு முக்கியமான விடயமாக இருந்தாலும் நான் சொல்வது அவர்கள்  காதில் விழுவதாக  இல்லை  
அதனால, அம்மாவும் அப்பாவும் என்னையும் கவனிக்க வேணும் என்பதற்காக  நான் ஒரு ஸ்மார்ட்போனா ஆகவேண்டும் என்று  ஆசைப்படுறேன்’’

இதைக் கேட்ட கணவரும் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார்  சரி   இதை எழுதிய மாணவன் யார் என கேட்டார்

"நம்ம பிள்ளைதான்"  என்றார் மனைவி
பெற்றோர்களே இன்றைய நவீன உலகத்தில் பிள்ளைகளுடனும் சற்று நேரத்தை செலவழியுங்கள்

இனிய காலை வணக்கம்
நட்புக்களுக்கு.

0 comments:

Post a Comment