👉 பொதுவாக காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது என்று அனைவரும் சொல்வார்கள். அதுவும் சனிக்கிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. காகத்திற்கு சாதம் வைப்பதால் நமக்கு என்ன நன்மை? ஏன் காகத்திற்கு சாதம் வைக்கிறோம்? அதை பற்றி இங்கே பார்ப்போம்.
👉 காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. நாம் உணவு உண்ணும் முன் காகத்திற்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும்.
👉 நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் பூலோகம் வருவதாக நம்பிக்கை. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம்.
👉 காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகமக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
👉 காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பதும் நம்பிக்கை.
👉 சனீஸ்வர பகவானின் வாகனம்தான் காகம் என்பதால், அதற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களில் இருந்து நாம் விடுபடலாம். அதேநேரம், இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்...
0 comments:
Post a Comment