கிளிநொச்சியில் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யுவதி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என நம்புவதற்கு வலுவான ஏதுநிலைகள் காணப்படுவதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பண்ணங்கண்டி பிரவுன் ரோட் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் இன்று(29) காலை இளம் யுவதி ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருந்தது. யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் கொண்டு சென்று போடப்பட்டிருக்கலாம் என நம்பும்படியான முதற்கட்ட தடயங்கள் கிடைத்துள்ளன.
சடலத்தில் உள்பாவாடை, பிற்சோற்ஸ், வெஸ்ட், பிரா போன்ற ஆடைகள் மாத்திரமே காணப்படுகின்றன. மேலாடைகள் எதுவுமே காணப்படவில்லை.
அத்தோடு காதில் தோடும் காணப்பட்டுள்ளன.
சடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் சிவில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்சள் நிறங்களில் செருப்புக்கள் இரண்டு சோடி, கால் சங்கிலி, சிவப்பு பேனை ஒன்று நீல பேனை ஒன்று போன்ற சான்றுப்பொருட்கள் காணப்பட்டுள்ளன.
மேலும் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் கழுத்தில் கறுப்பு அடையாளம், முகம் சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளது்
அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல்கள் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கும் விதமாக சடலத்தின் கால்களில் கரி படிந்திருக்கிறது. அத்தோடு சடலம் காணப்படும் இடத்தின் சூழலில் சிதறி கிடக்கும் சான்றுப்பொருட்களை அவதானிக்கின்ற போது குறித்த பகுதியில் கடலமாக காணப்படும் யுவதிக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் இடையே முரண்பாடுகளும், இழுபறிகளும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது
சம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டுள்ளார். அத்தோடு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி தடயவியல் பொலீஸார் உட்பட பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment