50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 25, 2018

வேல முடிச்சு வீட்டுக்கு வந்ததும் உடம்பு வலி சும்மா பின்னி எடுக்குதா? இத ட்ரை பண்ணுங்க.




நீண்ட நேர இடைவிடாத வேலை பளு, அலுவலக வேலை , வீட்டு வேலை, இதற்கிடையில் வீடு மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் இடையிலான போக்குவரத்து நெரிசல் என்று உங்கள் உடல் உழைத்து களைத்துக் கொண்டிருக்கிறது. தினமும் காலை அலாரம் வைத்து எழும்போதே ஒரு வித சோர்வு, மேலும் உடல் செயல்பட மறுப்பது என்று பல இடையூறுகள் தினமும் ஒவ்வொரு காலையும் நாம் உணர்வது தான். ஆனால் இதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

இந்த அளவிற்கு உடல் வலியை தரும் பிரச்சனையில் இருந்து விடுபட சில தீர்வுகள் உள்ளது. அது என்னவாக இருக்கும்? வலி நிவாரணி மாத்திரையாக இருக்குமோ? அதைத்தான் நாம் அதிகமாக பயன்படுத்துகிறோமே என்று நினைக்றீர்களா.. அது ஒரு மாத்திரை அல்ல. உங்கள் உடலின் உண்டாகும் வலியை இயற்கையாக போக்கும் விதத்தில் சில தீர்வுகள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் நாம் தொடர்ந்து காணலாம்
பொதுவாக உடல் வலி என்பது நம் உடலுக்குள் இருக்கும் பாதிப்புகளின் அறிகுறி தான். பொதுவாக இந்த உடல் வலி பெரிதாக எந்த ஒரு தீங்கையும் உண்டாக்குவதில்லை, என்றாலும் சிகிச்சைக்கு முன்னர், இந்த வலிக்கான காரணத்தை அறிந்து கொள்வது நல்லது.

அறிகுறிகள்

உடல் வலி உண்டாவதற்கான சில பொதுவான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனஅழுத்தம்

நீர்சத்து குறைபாடு

போதுமான அளவு தூக்கமின்மை

நிமோனியா

கீல்வாதம்

நாள்பட்ட சோர்வு நோய்க்குறி

குளிர் ஒத்தடம்

ஒரு ஐஸ் பேக் உடல் வலி உள்ள இடங்களில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

ஒரு 10 நிமிடம் அப்படியே விட வேண்டும். பின்பு இதே முறையை இரண்டு அல்லது மூன்று தடவை பின்பற்றலாம். இந்த தீர்வை நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை பின்பற்றலாம்.

ஐஸ் ஒத்தடம் கொடுப்பதால், வலி பாதிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக நரம்பு செயல்பாடு குறைகிறது. இதனால் வலியும் குறைகிறது. இந்த தீர்வு, உடல் வலியிலிருந்து தற்காலிக ஆனால் விரைவான தீர்வை அளிக்கிறது,

கடுகு எண்ணெய்

சிறிதளவு கடுகு எண்ணெய்யை எடுத்து உடல் முழுவதும் மசாஜ் செய்யவும். 30 அல்லது 40 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். பின்பு குளிக்கவும்.

தினமும் ஒரு முறையாவது இதனை பின்பற்றலாம். விடாப்பிடியான உடல் வலியைக் குறைக்க உதவும் மற்றொரு சிறந்த பொருள் கடுகு எண்ணெய். இந்த எண்ணெயில் அல்லில் ஐசோதியோசியனேட் என்னும் கூறு உள்ளது. இது அழற்சியால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவுகிறது.

வாழைப்பழம்

உங்கள் தினசரி உணவில் வாழைப்பழத்தை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் மூன்று அல்லது நான்கு வாழைப்பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். பலருக்கு உடல் வலி உண்டாவதற்கான காரணம் பொட்டாசியம் குறைபாடு. இந்த குறைபாட்டை சீராக்கவும், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கவும், தினமும் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் அவசியம்.

செர்ரி

ஒரு கிளாஸ் இனிப்பு சேர்க்கப்படாத செர்ரி ஜூஸ். தினமும் ஒரு கிளாஸ் இனிப்பு சேர்க்கப்படாத செர்ரி ஜூஸ் பருக வேண்டும். சிறந்த தீர்வுகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த செர்ரி சாற்றை பருகலாம். வீக்கத்தால் உண்டான வலியைக் குறைக்க செர்ரி சாறு உதவுகிறது. இதனால் தசை வலிக்கான சிகிச்சை, புற நரம்பு சிகிச்சை போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு தொழில்முறை

உடல் மசாஜ் செய்து கொள்வதால் தசை இறுக்கம் குறைந்து நிவாரணம் பெற உதவுகிறது, இதனால் உங்கள் தசைகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. எந்த ஒரு சிகிச்சையை விடவும் சிறந்த தீர்வை உடல் மசாஜ் தருவதாக பெய்ன் மெடிசின் என்ற பத்திரிகை நடத்திய ஒரு ஆய்வு கூறுகிறது.

வைட்டமின்

உடல் இயல்பாக இயங்குவதற்கு பல்வேறு வைட்டமின்கள் தேவைப்படுகிறது. வைட்டமின் பி1, டி, ஈ ஆகியவற்றின் குறைபாடு, நரம்பு மற்றும் தசைகளில் சேதத்தை உண்டாக்கலாம். இதன் விளைவாக, தசை பலவீனம் மற்றும் வலி உண்டாகலாம். அதனால், வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை தினசரி எடுத்துக் கொள்வதால், உடல் வலி தவிர்க்கப்படும். மேலும் மருத்துவரின் பரிந்துரைப்படி வைடமின் மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கை

போதுமான அளவு ஓய்வெடுங்கள். நீர் மற்றும் இதர திரவ பொருட்களை அதிகம் பருகுங்கள். வெதுவெதுப்பான நீரில் தினமும் குளியுங்கள். அதிக வெப்பம் அல்லது அதிக குளிர், எந்த நாட்களிலும் உங்கள் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் வலி நீடித்து இருப்பதால் ஒரு வித சோர்வு நம்மை ஆட்கொள்ளும். ஆகவே இதற்கான தீர்வுகள் மூலம் இவற்றை விரைந்து சரி செய்ய வேண்டும். ஆகவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தீர்வுகள் நிச்சயம் உங்களுக்கு உதவும். இது தவிர வேறு முறைகளில் உடல் வலியைப் போக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் எங்களுடன் அந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள் skp

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job