முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் டெல்லி விஜயம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சுப்ரமணியன் சுவாமி பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவிற்கு ஏனையோரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாகவே சுப்ரமணியன் சுவாமி பாரத ரத்னா விருதை மஹிந்தவுக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
“தனது மக்களுக்காக போராடி விடுதலையை பெற்றுக்கொடுத்த நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைப் போன்று, தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஸவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.”
பாரத இரத்தினம் அல்லது பாரத ரத்னா விருது என்பது இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.
மேலும், வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகளான அன்னை தெரசாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment