முடிந்தவரை எந்த காய் கனிகல் கீரைகளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் இயற்கை உணவை இயற்க்கையாகவே உண்ணவும் பதப்படுத்த வேண்டாம்
ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஃப்ரிட்ஜில் பதப்படுத்த வேண்டும். எல்லா வகையான உணவுகளையும் பதப்படுத்துவதால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து உடல் உபாதைகளை தரும். ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரியான் என்ற வாயு பதப்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களுக்குள் ஊடுருவி அவற்றின் தன்மையை மாற்றி விடும். மேலும் இவற்றின் மீது ஏதேனும் கிருமிகள் ஒட்டி கொண்டு இருந்தால் அதனையும் அதிக காலம் உயிர் வாழ செய்யும்.
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து சமைத்து உண்டால் அதன் தன்மை முற்றிலும் மாறி சக்கைக்கு ஈடாகி விடும். சிலர் தக்காளியை பல நாள் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இது அவற்றில் உள்ள என்சைம்களில் வேதி வினை புரிந்து மாற்றி விடுகிறது. அத்துடன் இதில் உள்ள 65 % ஊட்டசத்துக்கள் குறைந்தும் விடுகிறது. ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியில் சுவை குறைந்து, மணம் இல்லாதவாறு மாறிவிடும். அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியை சமைத்து சாப்பிட்டால் சில சமயங்களில் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட வரலாம்.
தக்காளிக்கு மட்டும்தானா இது?
பொதுவாக ஃப்ரிட்ஜில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்துக்களின் தன்மையை குறைத்து விடும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் பழத்தின் தன்மை மாறி, தோல் இறுகி விடும். இவற்றின் சுவை மற்றும் அமிலத்தில் மாற்றம் பெரும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவு நன்மையற்ற பொருளுக்கு சமமாக கருதப்படும். தக்காளியை மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது என்றில்லை, இதை போன்றே பல்வேறு உணவு வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.
ஃப்ரிட்ஜில் வைக்க கூடாதவை.
மூலிகைகள் போன்றவற்றை கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் அவற்றின் மருத்துவ தன்மை மாறக்கூடும். மேலும் சில சமயங்களில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அவகேடோ, வாழைப்பழம், எலுமிச்சை, ஆப்பிள், பெரிஸ் போன்ற பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்க தவிர்க்க வேண்டும். வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு, பூண்டு, மிளகு, வாசனை பொருட்கள், ஜாம், ஊறுகாய், பிரட் ஆகியவற்றையும் பதப்படுத்த கூடாது.
ஃப்ரிட்ஜில் தட்பவெப்பம்.
எந்த வகை ஃப்ரிட்ஜாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவே அதன் தட்பவெப்பம் இருத்தல் வேண்டும். அதிக படியான தட்பவெப்பம் உணவு பொருட்களின் தன்மையை மாற்றி விடும். உணவுகள் நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தப்பட்டு அதன் பிறகு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் அதற்கென்று சில கால அளவு இருக்கிறது. அதே போல் ஒவ்வொரு உணவிற்கும் தனி தனி தட்பவெப்பமும் உள்ளது. அதற்கேற்றாற் போல ஃப்ரிட்ஜின் தட்ப வெப்பத்தை வைத்தல் சிறந்தது.
எது சிறந்தது?
எப்போதும் சுத்தமான ஃபிரெஷ் உணவுகளே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. காய்கறிகள் என்றாலும் பழங்கள் என்றாலும் அதன் தன்மை அவற்றின் கால அளவு மற்றும் பதப்படுத்தும் முறையை பொருத்தே தீர்மானிக்க படும். எப்போது உணவு உண்டாலும் அது பதப்படுத்தாத உணவா ? என்பதை அறிந்து உண்ணவும். அத்துடன் வெளியில் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது
0 comments:
Post a Comment