சிறுநீரக கல் உருவாகி அது சிறுநீர் குழாய்க்கு வந்து வெளியேற முடியாமல் ஏற்படுத்தும் வலியானது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த சிறுநீரக கல் உருவாவதற்கு தவறான உணவு பழக்கங்களும், போதுமான அளவு நீர் அருந்தாதும் என்று சொல்லப்பட்டாலும், மனித இரத்தத்தில் யூரிக் என்ற அமிலத்தின் அளவு 6 மில்லிகிராம் இருக்க வேண்டுமாம். ஒருசிலருக்கு இந்த அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகங்கள் அதை வெளியேற்றுவதால் சிறுநீர் பாதையில் படிகங்களாக படிவதுண்டு. மேலும் அளவுக்கதிகமாக நம் உடலில் சேரும் கால்சியமும் சிறுநீர் கற்களாக மாறும் அபாயமும் உண்டு.
சிறுநீரக கல்லின் அளவை பொருத்து, அறுவை சிகிச்சை அல்லது மருந்து மாத்திரை களில் குணப்படுத்தப்படுகிறது. ஒருநாளைக்கு 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்,வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது, தக்காளி ,உப்பு இவைகளை உணவில் குறைத்து கொள்வது, போன்றவையெல்லாம் நாமாக இந்த சிறுநீரக கல்லிற்கு எடுத்துக்கொள்ளும் மருத்துவ முறைகளாகும்.
நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நெருஞ்சில் முள்ளால் குத்து வாங்கியிருப்போம். அதுதான் இந்த சிறுநீரக கல் அடைப்பிற்கு ஒரு சிறந்த அருமருந்தாகும்.
உண்ணும் முறை
நன்கு செழித்து முளைத்திருக்கும் சிறு நெருஞ்சில் செடியை வேருடன் 100 கிராம் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதனோடு கொத்தமல்லி விதைகள் 10 கிராம் சேர்த்து, அதில் தேவையான அளவு நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியளவு வந்ததும் அதை வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதை தினமும் காலை மாலை இருவேளையும் 60 மில்லி வீதம் குடித்து வந்தால்,உங்கள் சிறுநீரக கல் தூள் தூளாக மறைந்துவிடும்.
நெருஞ்சில் மேலும் குணப்படுத்தும் மற்ற நோய்கள்
பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் தொற்று, சிறுநீருடன் இரத்தம் வருதல், பெண்களின் கர்ப்பை நோய்கள், சிறுநீரக சம்பத்தப்பட்ட அனைத்து நோய்களும், வெட்டை, உடல் சூடு போன்றவைகளும் குணமாகும்.
நெருஞ்சில் மூலிகையை பற்றி நிறைய தேடி தெரிந்துகொண்டு உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி குனமாகுங்கள் skp
0 comments:
Post a Comment