மான்ட்ரியலில் இரண்டு யூதப் பள்ளிகள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக கண்டித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவாக யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கனடாவின் மான்ட்ரியலில் உள்ள 2 யூத பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
2 jewish school shot by gun
9ஆம் திகதி காலையில் ஊழியர்கள் வந்தபோது, கட்டிடத்தின் வெளிப்புறத்தில் தோட்டா துளைகளைக் கண்டுபிடித்தனர். எனினும், இது நடந்தபோது உள்ளே யாரும் இருக்கவில்லை எனவும், ஒரே இரவில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ட்ரூடோ கண்டனம்
இச்சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'மான்ட்ரீலில் உள்ள யூதப் பள்ளிகளில் ஒரே இரவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்திகள் திகிலூட்டுகின்றன. இந்த வன்முறைச் செயல்களை நான் மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன் - மேலும் நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்: இந்த வெறுப்பு கனடாவில் இடமில்லை, நாம் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment