அனுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் அரை ஏக்கரில் மிளகாய் பயிரிட்டு 70 லட்சம் ரூபா வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.
திறபனையை சேர்ந்த இளம் விவசாயி ஒருவரினால் இந்த மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையைப் பயன்படுத்தி அவர் இந்த விவசாய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மிளகாய் செடி
பாரம்பரிய முறையில் அரை ஏக்கரில் 6000 மிளகாய் செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். ஆனால் அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையில் 13,000 மிளகாய் செடிகளை வளர்க்கலாம்.
Boy Earned 70 Lakh Rupees By Cultivating
மகைலுப்பல்லம விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே இரண்டு புதிய மிளகாய் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, இந்த இளைஞன் மிளகாய் பயிரிட்டு 70 லட்சம் ரூபா வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.
0 comments:
Post a Comment