பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேனை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமர் ரிஷியை எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
என்ன காரணம்?
சுவெல்லா, சமீபத்தில் தி டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை வெறுப்பு பேரணியினர் என்று வர்ணித்துள்ளதுடன், இந்த பேரணிகள் காசாவுக்கு உதவுவதற்காக அழைப்பு விடுவதற்காக நடத்தப்படும் பேரணிகள் மட்டும் அல்ல என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சனிக்கிழமை நடந்த பேரணிகளை ஒழுங்கு செய்த சிலருக்கு, ஹமாஸ் உட்பட சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கவலையை ஏற்படுத்தும் செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை அனுமதிக்கும் பொலிசார் இரட்டை வேடம் போடுவதாகவும், இடது சாரியினரை கடுமையாகவும், வலது சாரியினரை கடுமையின்றியும் நடத்துவதாகவும் அவர் பொலிசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.
பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சியினர் கோரிக்கை
சுவெல்லாவுக்கு, எதிர்க்கட்சியினரிடமிருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. சுவெல்லா கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டியுள்ள Jonathan Reynolds என்னும் அரசியல்வாதி, பிரதமர் ரிஷி சுவெல்லாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
Pm Rishi To Sack British Home Secretary
சுவெல்லாவை எதிர்க்கும் விடயத்தில்,லேபர் கட்சியுடன் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியும் இணைந்துகொண்டுள்ளது. அக்கட்சித் தலைவரான, சர். Ed Davey, சுவெல்லா, பொலிசாரை ஆபத்தான நிலைக்கு ஆளாக்குவதாக தெரிவித்துள்ளார்.
உள்துறைச் செயலரின் பொறுப்பற்ற வார்த்தைகளும், மோசமான நடவடிக்கைகளும், வார இறுதியில் அமைதியற்ற நிலைமையும், பொலிசாருக்கு எதிராக வன்முறை ஏற்படும் அபாயத்தையும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அதிகப்படுத்தியுள்ளன என்று கூறியுள்ளார் அவர்.
0 comments:
Post a Comment