சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கனடாவுக்கு முதல் முறையாக பயணம் செய்து பிரதமருடன் உரையாடினார்.
சுவிஸ் ஜனாதிபதி
கனடாவுக்கு முதல் முறையாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் பயணம் மேற்கொண்டார். அங்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கனடா மற்றும் சுவிஸ் நாடுகளின் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதம் செய்தார்.
அத்துடன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் தற்போதைய நெருக்கடிகளின் சூழலில் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிப்பதை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் விவாதித்ததாக அலைன் பதிவிட்டுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ
இதேபோல் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனது பதிவில் சுவிஸ் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர், 'அலைன் பெர்செட்டும் நானும் இன்று காலை சந்தித்தோம். கனடா - சுவிட்சர்லாந்து கூட்டாண்மை, உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையை சிறந்ததாக்க நாங்கள் செய்து வரும் பணிகள் பற்றி பேசினோம். அலைன், உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி - தொடர்ந்து ஒன்றாக பணியாற்றுவோம்' என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment