ஈழத்தமிழர் என்றாலே யாழ்ப்பாணம் என்றுரைக்குமளவுக்கு புகழ் பெற்ற மாவட்டமாக ஈழத்தில் யாழ்ப்பாணம் ஒளிர்கின்றது.
பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் யாழ் மாவட்டத்தின் இடங்களில் யாழ்க்கோட்டையும் ஒன்று. போர்த்துக்கேயரால் நாற்சதுர அமைப்பில் கட்டப்பட்டு ஒல்லாந்தரால் ஐங்கோண வடிவில் மாற்றியமைக்கப்பட்டது யாழ்ப்பாணக் கோட்டை.
ஈழ யுத்தத்தின் போது அதனை சிறிலங்கா இராணுவத்திடம் இருந்து விடுதலை புலிகள் கைப்பற்றியிருந்தனர்.
எழுத்துப் பிழை
யாழ்ப்பாணக் கோட்டை தொல்பொருள் திணைக்களத்தினால் மீள் புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினருக்காக வழங்கிவைக்கும் நிகழ்விற்காக அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை தூபியில் " ஆலோசனை" என்பதற்கு பதிலாக "ஆலொசனை" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
அத்தோடு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை குறிப்பிடும் போது "விஜயகலாமகேஸ்வரன் " என குறிக்கப்பட்டுள்ளது. இது "விஜயகலா மகேஸ்வரன் "என அமைவதே பொருத்தப்படானது. என யாழ் கோட்டையில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த தமிழாசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்பட்டு இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழர்களின் பூர்வீகமான யாழ்ப்பாணத்தில் இப்படியான தவறுகள் நடந்திருப்பதும் அதனை நீண்ட நாட்களாக கண்டுகொள்ளாமல் இருப்பதும் மன வேதனையைத் தருவதாக தமிழார்வலர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாநகர சபையின் நிர்வாகத்தினரும் இது பற்றி கரிசனை கொண்டதாக தெரியவில்லை என யாழ் கோட்டையில் சுற்றிப்பார்க்க வந்திருந்த பலரிடம் இது பற்றிக் கேட்ட போது குறிப்பிட்டதோடு அதனை மாற்றி எழுத்துப் பிழைகள் இல்லாதவாறான மாற்றங்களோடு புதியனவற்றை பிரிதியிட்டிருக்கலாம் எனவும் கருத்திட்டனர்.
Spelling Mistake In Nameplate Of Jaffna Fort
தாய்மொழியில் தவறிப்பது மகிழ்வுக்குரியதாக இருக்காது என வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சிலரிடம் இதுபற்றி கருத்துக் கேட்ட போது குறிப்பிட்டிருந்தனர்.
இலங்கையில் தமிழை பிழையாக பொது இடங்களில் எழுதுவதனை, பயன்படுத்தப்படுவதனை குறிப்பிட்டு மாற்றம் வேண்டும் என கேட்கும் வேளையில் தமிழர்களால் நிறைந்த யாழ்ப்பாணத்தில் பொது இடமொன்றில் இப்படி இருப்பது கவலைக்குரியது.
இந்த ஆரம்ப நிகழ்வானது 2016 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 18 திகதியன்று இராஜாங்க அமைச்சரின் பங்குற்றுதலோடு அப்போதைய கல்வியமைச்சரால் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment