கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் அவென்யூ வீதியில் செயல்பட்டு வந்த மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாடுகள் நடைபெற்று வந்த இடத்தில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடத்தினர். ந்த சுற்றிவளைப்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.46 வயதுடைய ஒருவர் – பொலிஸாரின் தகவலின்படி, இவர் பொரளை பகுதியில் வசிக்கும் மசாஜ் நிலைய முகாமையாளர் என்று தெரியவந்துள்ளது.
ஒருவர் 28 வயது – வெல்லவாய பகுதியை சேர்ந்தவர்.மற்றொருவர் 29 வயது – பம்பலப்பிட்டியை சேர்ந்தவர். மூன்றாவது பெண் 34 வயது – வெள்ளவத்தை பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடராது இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளிவரும் பட்சத்தில், அதை உடனடியாக வழங்குவோம்.
0 comments:
Post a Comment