யாழில் திறந்த முதல் நாளிலேயே 19 மில்லியன் ரூபா வியாபரத்தினை பதிவு செய்திருக்கிறது கீல்ஸ் சுப்பர் மார்க்கெட். இதுபோல தான் முன்னர் கார்கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டும் பதிவு செய்தது.
அத்தோடு பல மல்ரி நசனல் கொம்பனிகள், உணவகங்கள் புதிதாக வருவதோடு சென்னை பிரியாணி கடைகளும் ஆங்காங்கே முளைத்து விபாபாரம் ஈட்டி வருகிறார்கள்.
இப்படி அவர்களின் முதலீடு வடக்கில் வருவதை நாம் குறைகூறவில்லை.
பெரிதாக எந்த உற்பத்தியோ வியாபாரமோ வடக்கில் இல்லாது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் அது பெரும் பங்களிப்பை வழங்காத போதும் இவ்வாறான நிறுவனங்கள் மூலம் வடக்கில் இருந்து பல மில்லியன் ரூபா வடக்கிற்கே உரித்தில்லாதவர்களுக்கு சென்றடைகிறது.
போர்முடிந்து ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் அதிக நிதி வல்லமையினை கொண்ட தமிழர்கள் வடக்கில் எந்தவொரு சொல்லக்கூடியதான பாரிய முதலீடுகளினை செய்யவில்லை. இந்த நிலை இனவழிப்புப்செய்யபட்ட ஓர் இனத்தின் பொருளாதர அழிப்புக்கு துணைபோகும் நிலையாகும்.
எல்லா வழியிலும் இழப்பை சந்தித்த இனத்தின் பொருளாதார எழுச்சி என்பது இன்றியமையாதது.
அதற்கான எந்த முன்முயற்சிகள் முதலீடுகள் புலம்பெயர் பெரும் வர்த்தகர்களால் இங்கு ஏற்பட்டதாக இல்லை.
வடக்கில் பாரிய வர்த்தக முதலீடுகளைனை மேற்கொண்டு வடக்கின் நிதி வடக்கில் திரள் நிதியாக நிற்பதே வலுவான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்பும்.
அதுபோலவே தற்காலங்களில் அதிகமாக திறக்கப்படும் மேலைதேய உணவகங்கள் மற்றும் தமிழ்நாட்டு பிரியாணி கடைகளும் எம் சுதேசிய உணவில் இருந்து எம் இளைய தலைமுறையை விடுபடச்செய்துவிடும் அபாயமும் இல்லாமல்லில்லை.
உலகிற்கே வகை தொகையான ருசியான ஆரோக்கியமான உணவுகளை அறிமுகம் செய்த தமிழர்களாக நாம் இருக்கின்றோம். ஈழ தமிழனின் அதுவும் யாழ்பாண உணவுகளுக்கு பல நாட்டில் ஈர்ப்பும் மதிப்பும் உண்டு . எம் யாழ்பாண உணவுகளை உயர்தரத்தில் வழங்கும் பெரிய கொட்டல்களை இன்னும் இன்னும் முதலிட்டு உருவாக்க வேண்டும். எம் உணவுகளினை உட்கொள்ள மற்றைய நாட்டுக்காரனை வரிசையில் நிற்க வைக்க வேண்டும். அதைவிடுத்து பிரியாணியோ பீட்சாவோ நாவில் பட்டிராதவர்கள் போல வேலை வெட்டி இல்லாமல் நீளமான வரிசைகளில் தூங்கி கிடந்து வாங்கி சாப்பிடும் நிலையில் இருக்கிறது எமது உணவு பொருளாதாரம்!
சற்று சிந்தித்து பாருங்கள்.
சொல்லிக்கொள்ளக்கூடிய சில உணவகங்கள் இருந்தாலும் அதில் முதலீடுகளும் குறைவு. ஆக அந்த வெற்றிடத்தினை தமிழ்நாட்டு உணவகங்கள் நிரப்பிவிடுகின்றன.
நாம் உணவு விடயத்திலும் தோற்று போய் எம் உணவு பாரம்பரியத்தினை கைவிட்டு செல்கிறோமோ என்ற அபாயமும் இல்லாமலில்லை. போறபோக்கில் கேரள உணவகங்கள் இந்திய வடநாட்டு உணவகங்களும் முதலிட்டு வடக்கு நிதியை அள்ளி செல்ல்லலாம்.
இதில் முதலிட வருவோரில் எந்த பிழையும் இல்லை
எங்களில் யாருக்கும் சிறந்த துறைகளை இனம்காண தெரியவில்லை, இருக்கும் துறைகளை மேம்படுத்த தெரியவில்லை, இருப்பதை எப்படி கவர்ச்சிகரமாக மக்களிடம் கொண்டு சேர்பது என தெரியவில்லை, அதைவிட எங்கள் பொருளாராரம் பற்றியோ எதிர்கால பொருளாதார எழுச்சி பற்றியோ வளர்ச்சி பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாமல் சும்மா நிகழ்காலத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
அதுமாத்திரமல்ல வடக்கில் உள்ள வர்த்தகர்கள்
ஆக எம் தமிழ் பெரும் வர்தக்கள் தம் சொந்த மக்கள் மீது கூட கரிசனை கொண்டவர்களாக தெரியவில்லை, நியாய விலைகளில் தொழில் செய்வதில்லை, பதுக்குதல், விலைசூத்திரங்களினை வித்தியாசமாக கையாளுதல் என மக்கள் நலன் சாராது அதிக லாபம் கருதி செயல்படுவதால் மற்றைய பெரும் முதலீடுகள் பக்கம் மக்கள் ஒபர் என்றதுமே ஓடிவிடுவார்கள் . அது எந்த நாட்டு மக்களினதும் குணாதிசயம்.
அத்தோடு யாழ்பாணத்தில் புடவை வியாபரம், உணவு வியாபாரம், இறைச்சி வியாபாரம் எல்லாவற்றையும் முஸ்லிம்களிடம் இழந்து நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர்கள் இனம் சார்ந் ஊக்குவிப்புடனும் செயல்படாமல் தனியே வர்த்தகம் சிறு லாபம் என்ற நோக்கத்தில் செயல்பட்டதன் விளைவுகள் தமிழர்களுக்கே உரித்தான பல வாணிபங்கள் முலிம்கள் பக்கம் பறிபோய்விட்டது.
ஆக எல்லாவற்றுக்கும் நாம் தான் அடிக்காரணம்.
போரின் பின்னான காலங்களில் பெரும் முதலீடுகளை செய்யவில்லை , எங்களின் ஏற்பட்ட வெற்றிடத்தினை மற்றவர்கள் நிரப்பி லாபமும் சம்பாதிக்கிறார்கள் அதுதான் நிதர்சனமான உண்மை.
பொருளாதார அழிவு என்பதும் இன அழிவின் ஓர் அங்கம் . பொருளாதாரத்தினால் நலிவடைந்தவினம் இலகுவாக நசுக்கப்படும். ஆக இன்று சுய இனவழிப்பு செய்து கொண்டிருக்கிறது ஈழ தமிழினம்.
நன்றி
மதுசுதன்
01.03.205
0 comments:
Post a Comment