கடந்த இரண்டு நாட்களாக தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் சிலர், வாய்ப்புக்காக ஆடையின்றி வீடியோ காலில் பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது சீரியல் நடிகைகளும் இதுபோன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது இந்த வீடியோக்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சிறகடிக்க ஆசை" என்ற தொடரில் நடித்த இளம் நடிகை ஒருவர், வாய்ப்புக்காக ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிய காட்சிகள் வைரலான நிலையில், தற்போது மற்றொரு இளம் சீரியல் நடிகையின் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
சுமார் 35 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், பேசும் நபர் அந்த நடிகையை செய்யக்கூடாத செயல்களையெல்லாம் வீடியோ காலிலேயே செய்து காட்டும்படி கூறுகிறார். அதற்கு அந்த நடிகையும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அப்படியே செய்து காட்டுகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, இன்னும் எத்தனை நடிகைகள் இதுபோன்ற வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்றும், யார் இந்த வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வெளியிடுகிறார்கள் என்றும் விவாதித்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்த இரண்டாவது வீடியோவில் உள்ள நடிகை ஏற்கனவே சில பிரபலமான சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
பல்வேறு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்து வரும் அவர் எதற்காக இப்படி செய்ய வேண்டியிருந்தது அல்லது இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.
சீரியல் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக சில சீரியல் நடிகைகள் வெளிப்படையாக கூறியிருந்ததும், அப்படி மறுத்தால் சீரியலில் இருந்து பாதியிலேயே நீக்கி விடுவார்கள் அல்லது எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள் என்று புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள், சின்னத்திரை நடிகைகளும் பாலி யல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment