அரச புலனாய்வாளர்களின் வழிநடத்தலில் அர்ச்சுனா செயற்பட்டுவருவதாக கடும் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அருச்சுனாவால் கடுமையாகத் தாக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளார் அருச்சுனாவின் தங்கம் என சமூகவலைத்தளம் ஒன்றில் இந்தத் தகவல்கள் வந்துள்ளன. அதனை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அருச்சுனாவின் ஊசிக்கட்சியில் போட்டியிடுதற்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் இளைஞர் யுவதிகள் எவரும் முன்வரவில்லை எனவும் இதன் காரணமாக பிழையான தகவல்கள் மற்றும் போலிக்கையொப்பங்களுடன் அர்ச்சுனா தேர்தல் வேட்புமணுப் படிவத்தை நிரப்பியுள்ளதாகவும் பல்வேறு தரப்புக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் எமக்குக் கிடைத்த சில தகவல்கள் நம்பகரமானவையாக உள்ளது.
தேர்தல் வேட்புமணுப்படிவங்களை நிரப்பும் பொறுப்பை அருச்சுனா கௌசல்யாவிடம் வழங்கியிருந்தார். குறித்த படிவங்களில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் அனைத்து தகவல்களும் அவர்களின் கையொப்பங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் போட்டியிடுபவர்களே இல்லாத நிலையில் தமது பேஸ்புக்கில் தொடர்பில் இருந்த சிலரை பேஸ்புக் மூலமாகவே கேட்டு படிவம் நிரப்பபட்டுள்ளது. ஆனால் கையொப்பம் இட அவர்கள் வராத நிலையில் குறித்த தேர்தல் விண்ணப்பபடிவத்தில் கௌசல்யாவே ஒரு சில கையொப்பங்களைத் தவிர அனைத்துக்கும் கையெழுத்திட்டுள்ளார். இதன் பின்னர் அருச்சுனாவின் வேட்புமணுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நிரப்பிய படிவங்களின் கையெழுத்துக்கள் சமூகவலைத்தளத்தில் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தன.
இதனால் கடும் கடுப்பான அர்ச்சுனா தனது தங்கத்தை மொங்கு மொங்கென மொங்கிய பின் தொலைபேசிகள் உட்பட்ட அனைத்தையும் பறித்துவிட்டு துரத்தியுள்ளார். அருச்சுனாவின் கடும் தாக்குதலால் நிலைகுலைந்த தங்கம் தாக்குதல் காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பின் தனது சொந்த வீட்டுக்கு நீண்டகாலத்தின் பின் சென்றுள்ளார்,. கௌசல்யாவுக்கு சொந்தமான பேஸ்புக் கணக்குகள், வட்சப் உட்பட அனைத்து சமூகவலைத்தளங்களும அர்ச்சுனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரே துரத்தப்பட்டுள்ளார். அத்துடன் அருச்சுனாவுக்கு வந்த வெளிநாட்டு உண்டியல் பணங்கள் எல்லாம் கௌசல்யா பெயரிலேயே வந்ததாகவும் தற்போது அவற்றை மீண்டும் வெளிநாட்டுக்கு திருப்பி அனுப்பி தனது உறவினரான இன்னொருவர் பெயருக்கு அதனை மீளப் பெற அர்ச்சுனா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நட்பு வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது. இது தொடர்பாக தங்கத்தின் தாயார் கடும் கடுப்பில் இருப்பதாகவும் ஊடகங்கள் தன்னை அணுகினால் அருச்சுனா தொடர்பாக பல உண்மைகளை வெளிப்படுத்துவேன் எனவும் தங்கத்தைப் பெற்ற சொக்கத்தங்கம் தெரிவித்துள்ளதாம்.
0 comments:
Post a Comment