யாழில் பல வைத்தியசாலைகளில் கடமையாற்றி மந்திகை ஆதார வைத்தியசாலையில் பதில் மகப்பேற்று நிபுணராக கடமையாற்றிய வேளையில் விப ச்சாரத்தில் ஈடுபடும் பெண் ஒருவருக்கு கருத்தடை செய்து அதன் பின்னரும் அப் பெண் கர்ப்பமானதால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பதில் மகப்பேற்று நிபுணர் சிவஞானம் சிவச்சந்திரன் தொடர்பாக வம்பனுக்கு ஏராளமான முறைப்பாடுகள் கி்டைக்கப் பெற்றுள்ளது. வைத்தியத் தவறுகள் செய்து அதனால் ஏற்பட்ட விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாது லண்டனுக்கு ஓடிச் சென்று தற்போது இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக கருனை செலுத்துவதாக தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவுகள் இட்டுவரும் சிவச்சந்திரன் அவர்களது பதிவு ஒன்றை இங்கு தந்துள்ளோம்.
குறித்த சிவச்சந்திரனும் பைத்தியர் அர்சுனாவும் பேஸ்புக்கில் தமக்கிடையே கடும் சண்டையிட்டு வருகின்றார்கள். இவர்கள் இருவரும் இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு வைத்தியத்துறையில் எந்தவொரு பயனும் கொடுக்காது அலம்பிக் கொண்டிருப்பதாக இருவர் தொடர்பாகவும் கருத்துப் பதிவுகள் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டுள்ளன.
சிவச்சந்திரனின் பதிவு கீழே உள்ளது.
நான் உள்ளக பயிற்ச்சியில் இருந்த ஒரு நாள் சக பெண் வைத்தியர் வந்து என்ட பேசன்டுக்கு ஒருக்கா கதீட்டர் போட்டு விடுறீயா என்று கேட்டாள். அதாவது சிறுநீர் கழிக்கும் குழாய் போட்டு விட கேட்டாள்.
அது ஆண் நோயாளி என்பதால் ஆணுறுப்பை கையால் பிடித்து குழாயை போட வேண்டும். அவள் அதற்காக வெட்கப்பட்டு வந்து கேட்கவில்லை.
அவள் ஆணுறுப்பை பிடித்து அந்த குழாயை போட முனைந்தபோது அந்த நோயாளி அவளின் கையைப்பிடித்து வடிவாய் இருக்கிறாய் செக்ஸ் பணணுவமா? என்று கேட்டு இருக்கிறார்.
அதை அவளே பெரிதாக எடுக்கவில்லை , காரணம் அந்த நோயாளி சுயநினைவில் அதை செய்யவில்லை,அவரது நோய் நிலமை அப்படி.
நடந்த விடயத்தை சிரித்துக்கொண்டு என்னிடம் சொல்லிவிட்டு அந்த நோயாளியை என்னிடம் பொறுப்பு தந்துவிட்டு மிச்சமிருந்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள்.
இது நடந்து சில நாட்களில் அந்த நோயாளியின் இதயத்துடிப்பு நின்றபோது , நானும் அவளும்
தான் மாறி மாறி , நோயாளியின் நெஞ்சை அழுத்தி அந்த இதயம் மீண்டும் துடித்துவிடாதா என்று முயற்சி செய்துகொண்டு இருந்தோம்.
அந்த நோயாளி வாழ்வின் இறுதிக்கட்ட நோயாளி, மனக்குழப்பத்தில் அதைச் செய்ததால் அவள் அதை பெரிதாக எடுக்கவில்லை என்று சிரித்துக் கொண்டு வேலையை தொடர்ந்தாளா அல்லது அதை பெரிதாக எடுக்கவில்லை என்று நடித்துக்கொண்டு வேலையை தொடர்ந்தாளா என்று இன்று யோசிக்கிறேன்.
பெண்கள் வேலையிடங்களில், வெளியிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி ஆண்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதாவது ஆண்கள் அதற்காக முயற்சிப்பதில்லை.
மேலே சொன்ன சக வைத்தியர் , என் வயதுக்காரி, ஒரே அளவு படித்தோம் , ஒரே வேலை செய்தோம் , சம்பளமும் ஒரே அளவுதான்.
ஆனால் வேலையிடத்தில் நான் எதிர்கொள்வதை விட அவளுக்கு மேலதிகமாகவும் ஒரு பிரச்சினை இருந்தது.
இந்த பிரச்சினை வேலை செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு.
கணவனும் மனைவியும் காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேலை செய்வார்கள். ஆனால் , வீடு வந்ததும் மனைவிதான் சமையல் செய்து வீட்டு வேலையையும் பார்க்க வேண்டும்.
அநுராதபுரத்தில் ஒரு பெண் வைத்தியர் வைத்திய சாலையில் வைத்தே ரேப் பண்ணப்பட்ட செய்தியையும் , அந்த செய்தியை எப்படி நமது மக்கள் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்கிறார்கள் என்று பார்க்கும் போது இதை எழுத தோன்றியது.
0 comments:
Post a Comment