தெல்லிப்பளை வைத்தியசாலை மனநல விடுதியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த யுவதியை வல் லுற வுக்குள்ளாக்கியது யார்?
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவருடன் பாலி யல் உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டில், வைத்தியசாலையின் துப்புரவு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெல்லிப்பளை பொலிசாரால் சந்தேகநபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் சந்தேகநபர் கூறியதாகவும், இதையடுத்து அவர்களுக்குள் வைத்தியசாலை வளாகத்துக்குள்ளேயே பாலி யல் உறவு ஏற்பட்டதாகவும் யுவதியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கு திருமணம் நிகழ்ந்து, குழந்தைகள் உள்ளதையும் அவர் யுவதியிடம் மறைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், வைத்தியசாலையின் ஏனைய சிலருடன் பேசிய யுவதி, அந்த நபரை காதலிக்கலாமா என வினவியதாகவும், அந்த நபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள விவகாரத்தை அவர்கள் குறிப்பிட்ட பின்னர், யுவதி இந்த விவகாரத்தை விடுதிக்கு பொறுப்பான வைத்தியரிடம் முறையிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதை தொடர்ந்து, யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டு, அறிக்கையிட்டதை தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் உள்ள பெண்கள் விடுதியை, ஆண் துப்புரவு பணியாளர் ஒருவர் சுலபமாக அணுகும் விதத்தில் இருந்தமை பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
0 comments:
Post a Comment