யாழ் ஊசிக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதனுக்கு நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு அடுத்த 8 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதையும் மீறி அவர் உரையாற்றினால் அதனை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும் அத்துடன் ஊடகங்கள் அவருடைய உரையை ஒளி, ஒலி பரப்பக்கூடாது எனவும் சபாநாயகர் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment