மிகப் பெரும் மோசடிகாரர்கள் மற்றும் சமூகவிரோத செயற்பாட்டாளர்கள் போன்றவர்களின் உறைவிடமாக மாறியுள்ளது கிளிநொச்சி. சமூகவலைத்தளங்கள் மூலம் அப்பாவிப் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் பறிப்பது, சபல புத்தியுள்ள புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களை கிளிநொச்சிக்கு வரவழைத்து விபச்சாரிகள் மூலம் பணம் பறிப்பது, உதவித் தொகை வழங்குவது என கூறி அப்பாவி இளம் குடும்பப் பெண்களை புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களுடன் தவறான உறவுகளைப் பேண விடுவது, கஞ்சா மற்றும் போதைப் பொருள் பாவனை்ககு மாணவர்களை உட்படுத்துவது, பேஸ்புக் மற்று்ம் ரிக்ரொக் போன்றவற்றில் சினிமா வசனங்கள் மற்றும் பாட்டுகளுக்கு பாவனை காட்டி தங்களை கதாநாயகர்கள் என காட்டி செயற்படுவது போன்றவற்றை குறித்த சமூகவிரோதிகள் செய்து வருகின்றார்கள்.
இவர்களை சமூகவலைத்தளங்களில் பின் தொடரும் அப்பாவிகள் இவர்களின் உண்மையான திருவிளையாடல்கள் தெரியாது இவர்களைக் கதாநாயகர்களாக நினைத்து வருகின்றார்கள். கிளிநொச்சியில் மிகப் பெரும் சமூகவிரோதியாக உருவாகியுள்ளவன் டிகே கார்த்தி என்பவன். இவன் கஞ்சா போதைக்கு அடிமையானவன். இவன் தொடர்பாக சில வருடங்களுக்கு முன் நாம் வெளியிட்ட பதிவினை கீழே தந்துள்ளோம்.
இந் நிலையில் தற்போதைய அரசாங்கமோ அல்லது வைத்தியர் அர்ச்சுனாவோ வழிநடத்தி வருவதாக பலராலும் சந்தேகிக்கப்பட்டுவருவதும் ஆனால் அவ்வாறு இரு தரப்பாலும் வழி நடாத்தாது சுயாதீனமான சிலரால் நடாத்தப்படுவதாக வம்பன் புலனாய்வாளர்களால் அறியப்பட்டதுமான ஒரே பெயர்களைக் கொண்ட ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு பேஸ்புக் விருப்புப் பக்கம் ஆகிய இரண்டு தளங்களிலிலும் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் தொடர்பாக பல பதிவுகள் வெளியாகியிருந்தன. இந்த இரு பேஸ்புக் தளங்கள் தொடர்பாக மிக விரிவான தகவல்களை நாம் பின்னர் தருகின்றோம். இதே வேளை அந்த சமூகவலைத்தளங்களில் கிளிநொச்சி டிகே கார்த்தி என்பவன் தொடா்பாகவும் பதிவுகள் வெளியாகியிருந்தது. இந் நிலையில் குறித்த பதிவுகளை வெளியிட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீது கொலை வெறித தாக்குதல் நடாத்தபட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
ஊழல் ஒழிப்பு அணி வன்னி அட்மின் என்று கருதி தர்மபுரத்தில் அப்பாவி இளைஞர் மீது வாள்வெட்டு : DK கார்த்திக் கைதாவாரா?
கட்டைக்காடு, தர்மபுரம் முகவரியில் இருவரின் வீட்டில் வைத்து நேற்று முன்தினம்இரவு 9.00 மணியளவில் தர்மபுரம் OIC சதுரங்கவி்ன் ஆட்கள் + கஞ்சா மதன் + DK கார்த்திக் ஆகியோரின் 12 பேர் கொண்ட குழு மதனின் காரில் அவரின் வீடு சென்று கொடூரமாக வெட்டி உள்ளனர்.
அப்பாவியான அவரின் பெயர் சங்கர் சுகிர்தன் இவருக்கு தலையில் 5 பாரிய வெட்டு, முதுகில், கைகளில் எல்லாம் கத்தி, வாள் வெட்டுக்கள்.,. அவரின் மனைவிக்கு 6 வெட்டுக்கள் , தாய் இன் கை முறிக்க பட்டுள்ளது.
பாவம் அந்த குடும்பமே கிளிநொச்சி ஹாஸ்பிடல் இல் தான் தற்போது உள்ளனர், இது மிக பெரும் மனித அவலம். காரணம் சுகிர்தன் தான் ஊழல் ஒழிப்பு அணி facebook இல் கஞ்சா மதன் மற்றும் OIC பற்றி பதிவு போட்டதாக கருதி வாள் வெட்டு நடந்துள்ளது….
கார்த்திக் இன்றைய பதிவில் இதைத்தான் கூறியுள்ளார், தாயிடம் கேளுங்கள் என்று, இவர்கள் வெட்டியது ஒரு அப்பாவியை ஆகும்
மக்களே இப்போது புரிகிறதா இந்த கார்த்திக் சமூகவிரோதிகளின் கூட்டாளி என்று???
தர்மபுரத்தில் அப்பாவி இளைஞன் மீது குண்டர்களை வைத்து வாளால் வெட்டியதோடு இல்லாமல், இன்னும் இரண்டு பேரை வெட்டப்போவதாக (இன்னும் இரண்டு விக்கட் விழுத்த வேணுமாம்) கூறும் DK கார்த்திக்??
கிளிநொச்சி மக்களுக்கு இப்போது புரிகிறதா இந்த வாள்வெட்டு சமூகவிரோதிகளின் பின்னணியையும் புலம்பெயர் பணம் ஏன் திருடப்பட்டது என்பது பற்றியும்
எங்கள் கணிப்பு எப்போதும் தவறியதில்லை, இப்போது ஆதாரத்துடன் உறுதிப்படுத்தி விட்டோம்
0 comments:
Post a Comment