பாரிசில் நான்கு நாட்கள் வாழ்ந்தால், அது இரண்டு சிகரெட் குடிப்பதற்கு சமம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சமீபகாலமாக காற்றின் நிலை சீர்கெட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தலைநகர் பாரிசில் 22 மைக்ரோ கிராம் / m3 எனும் அளவிற்கு காற்றின் அளவு சீர்கெட்டுள்ளது.
இது மிகவும் ஆபத்தான ஒன்று எனவும், பாரிசில் வசிப்பவர்கள் ஆண்டிற்கு 183 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமான உடல் உபாதைகளை சந்திப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முடிவிலே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இது கடந்த 1-ஆம் திகதியிலிருந்து 8-ஆம் திகதி வரை எடுக்கப்பட்டதாகவும், இந்த பட்டியலில் ஐரோப்பாவின் பல நகரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதில் பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது. இங்கு ஒரு நாள் வசிப்பது 2.75 சிகரெட் புகைப்பதற்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாரிசில் நிலவி வரும் சுற்றுச்சூழல் மாசடைவை கட்டுப்படுத்த பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment