கேரளாவில் மழை வெள்ளதால் மீண்டும் 33 பேர் இன்று பலியாகியுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலம் 19 ஆயிரத்து 512 கோடி ரூபா இழப்பை சந்தித்துள்ளதாகவும், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் 80 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோய் உள்ளநிலையில் தங்க இடமின்றி, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மின்சாரக் கம்பங்கள் சாய்ந்து பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கட்டுள்ளதுடன நிலச்சரிவு ஏற்பட்டு வீதிகள் பிளவுபட்டுக் காணப்படுகின்றன.
இந்தநிலையில் நாம் ஒரு பேரழிவின் நடுவில் இருக்கிறோம், அதைச் சமாளிக்க இணைந்து ஒன்றுபட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு போக்குவரத்து துண்டிப்பால் உணவு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று மட்டும் 33 பேர் பலியானதாகவும்,எந்த மாநிலத்திலும் இல்லாத பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment