வல்வையின் மாவீரன்
வருணகுலத்தானின் இறுதி
வாழ்நாளும்,தீருவிலில்
நடந்த இறுதி மூன்று
நாட்கள் போர்த்துகீசியருடனான
நடந்த தொடர் உக்கிர
சமர் ஈழ வரலாற்றிலும்
உலக வரலாற்றிலும் மூடி
முறைக்கப்பட்டதும்,ஈழ வரலாற்று
ஆசிரியர்களால் மறக்கப்பட்டதும் அவனுடைய வீரம் செறிந்த
வாழ்கை தெரியாமலேயே
போய்விட்டது!
இறுதி சமர் நடந்த "தீருவில்"லில் குளக் கரையில் வருணகுலத்தானுக்கு சிலையோ அல்லது மண்டபமோ அவனை நினைவு கூறும் பொருட்டு அமைத்து,அடுத்த தலை முறையினருக்கு அவனுடைய வீரம் செறிந்த வரலாற்றைை தெரியப்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழர்களுடைய வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமறையினர் அறிந்து.கொள்ள முடியும்!!
வல்வெட்டித்துறை கரையார் இனத் தளபதி "வருணகுலத்தான்" பகுதி-9
பதிவில்,மாசி மாதம் 2-ந் தேதி 1621 ம் ஆண்டு தீருவிலில் குளக்கரையை மையமாக வைத்து மூன்று நாள் சமர் நடந்த இடங்கள்(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன),பூங்கா,தீருவில் விளையாட்டு மைதானம்,வயலூர் சுப்பிரமணி சுவாமி,குமரப்பா,புலேந்திரன் மற்றும் 12 வேங்கைகளுக்கான நினைவுதுதூபி இடங்கள்,தீருவில் சதுக்கம்,புட்டணி பிள்ளையார்கோவில் என இந்த இடங்களில் தான் கடைசி மிக உக்கிர சமர் நடைபெற்று,இறுதியாக வருணகுலத்தான் குளக்கரையில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன்,தலை தனியாக துண்டிக்கப்பட்டு மரக்கிளையில் சொறுகப்படடான்.தற்போது,அந்தக் குளக்கரை வருணகுளத்தானின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது!ஆனால்,மக்கள் மறந்து விட்டார்கள்?
இறுதி போர் நடந்ததனால் புகழ் பெற்றிருந்த வல்வெட்டித்துறையில் இருந்த குளம்,பின்னாலில் வர்ணகுலத்தான் மற்றும் போர்த்துகீசியரின் சமரினால் சேதமடைந்து தூர்ந்து செல்கையில்,(தீரு=தூர்ந்து=வில்=குளம்)ஆகி பின்னாலில் "தீருவில்"என்ற பெயர் ஆனது....
0 comments:
Post a Comment