"இலங்கைப் பகுதியிலே யானையிறவுக்கப்பால் வன்னியர் தேசமிருந்தது. இவ் வன்னியர்கள் பெயரளவிலன்றி பறங்கியருக்காவது ஒல்லாந்தருக்காவது முற்றும் கீழ்ப்படிந்திருந்தவர்களல்லர்.
வன்னி கிழக்கே திரிகோணமலையையும், மேற்கே மாதோட்டத்தையும் (மன்னார்) எல்லையாகக் கொண்டிருந்த விஸ்தாரமான பிரிவு. யாழ்ப்பாண அரசரும் வன்னியில் எப்போதும் இராசரீகம் செலுத்தினாரில்லை"
யாழ்ப்பாண சரிதம் பக் - 79
அப்பேர்ப்பட்ட அடங்காப்பற்று வன்னி மண்ணை ஆண்ட வன்னியின் பூர்வீகக்குடிகளான வன்னியர்கள் தம் பரம்பரை மறந்து வயலும் வாழ்வும் என்று இருக்க படித்தவாலிபர் திட்டத்தில் குடியேற்றப்பட்டோரும் நீரின்றி வரட்சியால் தீவுகளில் இருந்து வன்னியை நோக்கி புலம்பெயர்ந்து குடிபுகுந்தோரும், இனக்கலவரத்தால் மலையகத்தில் இருந்து வந்து குடியமர்ந்தோரும் வன்னியை ஆள்கின்றனர் 😢
அதை விட கொடுமை வன்னியர் என்ற சமூகமே இன்று வழக்கொழிந்து போய்விட்டதுதான். கடந்த காலங்களில் டச்சுக்காரர்களுக்கு வன்னியர்கள் திறை செலுத்த மறுக்கிறார்கள் அவர்களுக்கு எதிராக கலகம் செய்கிறார்கள் என்பதால் யாழ் பிரதானிகள் மூன்று மாதத்திற்கு ஒருவர் என வன்னியின் ஆட்சியுடையோர்களில் ஒருவரை யாழ் கோட்டைக்குள் சிறைவைக்கும் ஓர் ஏற்பாட்டில் ஈடுபட்டனர் எனினும் அதுவும் கைக்கூடவில்லை அதன் பின் மலேரியா நோயை (காட்டுக்காய்ச்சல்) அவர்களிடையே பரப்பியும் நீர் நிலைகளை தூர்த்தும் பொருளாதார ரீதியில் நலிவடைய வைத்தும் அம்மக்கள் கூட்டத்தின் போராட்டத்தையும் ஓர்மத்தையும் நசுக்கினர்.
1800 களில் சோழர் பரம்பரையின் வாரிசும் வன்னியின் இறுதி மன்னனுமான பண்டார வன்னியனின் சகாப்தமும் முற்றுப்பெற்று அடங்காப்பற்று வன்னி மண் அந்நியர் வசமாகியதோடு வன்னியர்களும் காலச்சுவட்டில் இருந்து காணாமல் போனார்கள்!
0 comments:
Post a Comment