பகுதிநேர சூரிய கிரகணம் நாளை (ஆகஸ்ட் 11) நிகழவுள்ளது.அச்சமயத்தில் சூரியன் மீது நிலவின் நிழல் விழுவதால் சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்கி பின்னர் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படும்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனை சந்திரன் மறைக்கிறது. அதனால் பூமியில் சூரியன் வட்ட வடிவத்தில் தெரியும்.
அதாவது கிரகணம் நிகழும் குறிப்பிட்ட நிமிடம் மட்டும் வைர மோதிரம் போன்ற அரிய காட்சி தோன்றும். அந்த நேரத்தில் பளிச்சென்ற ஒளி பூமியில் மேல் விழும்.
இந்த சூரிய கிரகணம் சைபீரியாவில் மட்டிமே தெளிவாக பார்க்க முடியும், இந்தியாவில் அவ்வளவு தெளிவாக தெரியாது என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூரிய கிரகணம் மதியம் 1.32 மணிக்கு தொடங்கி மாலை 5.02 மணி வரை நீடிக்கவுள்ளது. கடந்த மாதம் 17-ம் தேதி இந்த ஆண்டின் நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment