உடலில் அதிகம் வியர்வை வெளியாகும் அக்குளில் சிலருக்கு கடுமையான அரிப்புகள் ஏற்படும்.
இது சிவப்பு அல்லது கருமை நிறத்தில் காணப்படுவதோடு, தோல் உரிய ஆரம்பித்து கடுமையான துர்நாற்றமும் வீசும்.
இதனை போக்க சில இயற்கை வழிகளை பார்ப்போம்.
அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
- உடலின் சுகாதாரம் மிகவும் மோசமாக இருப்பது. இதனால் உடலில் சொறி சிரங்கு, படை, படர்தாமரை போன்ற பாதிப்புகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
- தவறான கருவி மற்றும் தவறான முறையில் ஷேவ் செய்வதால், அக்குளின் நிறமே மாறி கருமை படர்ந்து விடும்.
- சுகாதாரமற்ற துவைக்காத அழுக்கு படிந்த ஆடைகளை அணிவதால் அது அக்குள் மற்றும் உடலின் பிற பாகங்களில் அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- உடலில் ஏதேனும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால், அதைக் குணப்படுத்த உண்ணும் மருந்துகள் மூலமாக உடலின் பல பாகங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.
- தினசரி பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு, உடல் சுகாதாரம், உடை சுகாதாரம் போன்றவற்றின் காரணமாக நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு உடலில் அரிப்பு ஏற்படலாம்.
அக்குளில் உண்டாகும் அரிப்பை போக்குவது எப்படி?
- ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் வைத்து மடித்து, அதை அரிப்பு ஏற்படும் அக்குளில் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
- 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 டீஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் கலந்து, அதில் காட்டன் பயன்படுத்தி அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை ஒரு நாளைக்கு 3-4 முறைகள் செய்ய வேண்டும்.
- ஒரு கைப்பிடி வேப்பிலையை ஒரு பாத்திர நீரில் போட்டு, 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அந்த நீரால் தினமும் 2-3 முறை அக்குளைக் கழுவ வேண்டும்.
- பேக்கிங் சோடாவுடன் நீர் கலந்து, அந்த நீரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 2 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஆனால் பேக்கிங் சோடாவை அக்குளில் 2 நிமிடங்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
- 1 டீஸ்பூன் சுத்தமான ஆப்பிள் சீடர் வினிகரை, 1/2 கப் நீரில் கலந்து, அரிப்புள்ள இடத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அதை அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வர, அக்குள் அரிப்பு நீங்கும்.
0 comments:
Post a Comment