பலாங்கொட நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராமத்தில் வாழும் மக்கள் காட்டு யானை அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு 10 மணியளவில் நண்பர்கள் இருவர் மரண வீடு ஒன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். தங்கள் கையடக்க தொலைபேசி வெளிச்சத்தின் உதவியுடன் இருவரும் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மாலை பெய்த கடும் மழையினால் அந்தப் பகுதி மேலும் இருளாக காணப்பட்டுள்ளது.
வீட்டிற்கு அருகில் நெருங்கிய இருவரில் ஒருவர் திடீரென பின்னால் நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த மற்ற நபர், பேய் எதுவும் தெரிகின்றதா என கேட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் காட்டு யானை உள்ளது. நாம் வேறு வழியில் வீடிற்கு செல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இருவரும் இணைந்து வீதிக்கு அருகில் உள்ள வீட்டில் யானையை விரட்டுவதற்கான வெடிமருந்தினை பெற்றுக் கொண்டுள்ளனர்.
யானை வெடியை பற்ற வைத்தவாறு இருவரும் யானைக்கு அருகில் நெருங்கியுள்ளனர். எனினும் யானை ஒரு அடியேனும் நகரவில்லை.
பின்னர் நன்றாக அருகில் சென்று தொலைபேசி வெளிச்சத்தில் பார்த்த போது அது மழையினால் வீதிக்கு வந்த பாரிய கல் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரும் அச்சமின்றி வீடு நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment