சீன நாட்டு மக்கள் சில வித்தியாசமான மருத்துவ முறைகளை கடைபிடித்து வருவது வழக்கமான ஒன்று.
உண்ணும் உணவு, சமைக்கும் முறை, பொருள், தொழில்நுட்பம் என அனைத்திலும் வித்யாசமாகவும் விசித்திரமாகவும் செயல்படும் சீனா, மருத்துவத்திலும் பல வித்யாசமான முறைகளை கடைபிடித்து வருவது தெரியவந்துள்ளது.
அப்படி என்ன விசித்திரமான சிகிச்சைகளை சீனா கையாள்கிறது?
குப்பிங் தெரபி
சூடேற்றப்பட்ட கண்ணாடி கப் போன்ற ஒன்றை உடலில் ஆங்காங்கே பொருத்தி செய்யப்படும் இந்த குப்பிங் தெரபி சிகிச்சை, சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். இது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.
அடிக்கும் சிகிச்சை
கடந்த 2011-ம் ஆண்டு க்ஸியோ ஹாங்-சீ என்பவர் ஸ்ட்ரெச்சிங் மசில்ஸ் அண்ட் பாடி ஸ்லாப்பிங் (muscle-stretching and body-slapping) என்ற புதிய சிகிச்சை முறையை பற்றி பேசினார். இந்த சிகிச்சை மூலம் நூற்றுக்கணக்கான வியாதிகளுக்கு தீர்வுக் காண முடியும் என அவர் கூறியதால் பெய்ஜிங், ஷாங்காய், நான்ஜிங் போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது.
சிறுநீர் சிகிச்சை
அதிதைராய்ட்(hyperthyroid) பிரச்சனைக்கு அவரவர் சிறுநீரை குடிப்பது சீனர்கள் மத்தியில் பரவலான பாரம்பரிய சிகிச்சையாக இருந்து வருகிறது. ஆனால், இது மிகவும் அபாயமானது என்று பல ஆய்வாளர்கள் கூறிவந்தாலும் சீனாவில் பலரும் இதை பின்பற்றி வருகிறார்கள்.
எறும்பு உண்ணும் சிகிச்சை
கடந்த 2001-ஆம் ஆண்டு சீனாவின் Hangzhou எனும் ஹோட்டலில், எறும்பு உண்ணும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முதல் எறும்பில் உயர்ரக புரதம் இருப்பதாகவும், இது முதிர்ச்சியை குறைக்க உதவுகிறது என்றும் பலரும் எறும்புகளை உண்ணு வருகின்றனர்.
மணல் சிகிச்சை
கடந்த 2013-ம் ஆண்டு "வெஸ்டர்ன் யுஷா தெரபி" எனும் மணல் சிகிச்சை முறை ஒன்று புதியதாக நான்ஜிங் எனும் இடத்தில் அறிமுகப்படுத்தினார்கள். இது, காந்தம், ஒளி போன்ற சிகிச்சை முறைகளின் கலப்பு முறை என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் சிலர் இந்த சிகிச்சையை செய்வதும், கடல் மணலில் படுத்து உருளுவதும் ஒன்று தான் என கூறிவருகிறார்கள்.
தேனீ சிகிச்சை
வாத நோய், கீல்வாதம், ஒற்றை தலைவலி, வயிற்று வலி, உயர் இரத்த கொழுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த தேனீ சிகிச்சை பயனளிப்பதாக கூறினும், இந்த சிகிச்சை மேற்கொள்வதால் பெருமளவில் அழற்சி(Inflammation) ஏற்படும் என கூறுகிறார்கள். இந்த அழற்சியால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்றும் திகைக்க வைக்கிறார்கள்.
0 comments:
Post a Comment