இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பெண் ஒருவர் தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்கும் வரத்தை பெற்றுள்ளார்.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்கவுள்ள சமபவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணுக்கு வயசு 27.
இவர் கருப்பை இல்லாமலே பிறந்துள்ளார்.
இந்த நிலையே, இவர் திருமணம் செய்து எல்லார் போலவும் தானும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இவருக்கு தோன்றியது.
இதன் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையை இவர் நாடியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய அறுவை சிகிச்சையின் மூலம் அவரது தாயாரின் கருப்பை அவருக்கு பொருத்தப்பட்டது.
தற்போது கர்ப்பிணியாக இருக்கும் மீனாட்சி குறித்து, சிகிக்சையளித்த மருத்துவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
“20 ஆண்டுகளாக எந்த குழந்தையும் பெறாத இவரது தாயின் கருப்பையே இவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண விடயம் இல்லை. இவ்வாறு செய்வதனால் தொற்றுநோய்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு என்று கருத்து கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி, ஆசியாவிலே கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் முதல் பெண் மீனாட்சி தான்.
உலகில் இதுவரை இவ்வாறாக 9 பேர் குழந்தை பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.”
பின்னர் இதுகுறித்து, சம்மந்தப்பட்ட பெண் பேசுகையில், நான் பிறந்த கருப்பையிலே என்னுடைய குழந்தையையும் பெற்றுக்கொள்ள போகிறேன் என்பதை நினைத்தாலே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment