உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? டயட் இருக்கலாம் நினைக்கிறீங்க.. ஆனா ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியல.எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத எடை குறைப்பிற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான ஒரு சிறந்த வழி ஆயுர்வேதம். ஆயுர்வேதம் மிகப் பழமையான மற்றும் நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறையாகும். உங்கள் ஆரோக்கியமும் இதன் மூலம் அதிகரிக்கிறது. ஆயுர்வேத முறையில் எடை குறைப்பை மேற்கொள்ள மருந்துகள் எடுத்துக் கொள்வது நிச்சயம் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் இதற்கான விதிகளை மீறாமல் நடக்க வேண்டும்.
தேன் மற்றும் எலுமிச்சை இந்த முறையை நீங்கள் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கலாம். எடை குறைப்பிற்கான பொதுவான முறையாக இது கருதப்படுகிறது.வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து பருக வேண்டும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.தினமும் காலையில் பல் துலக்கியாவுடன் இதனை பருகலாம். உங்கள் பசியைக் குறைக்க இந்த பானம் உதவுகிறது.மேலும் உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்க உதவுகிறது. குளிர் நீரில் இந்த பானத்தை பருகுவதால் சளி பிடிக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே வெதுவெதுப்பான நீர் இதற்கு சிறந்த பலனைத் தரும்.இதேவேளை, இந்த பானத்துடன் சிறிதளவு மிளகு சேர்ப்பதால் இன்னும் பலன் அதிகரிக்கும். ஆனால் இந்த பானத்தை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சரியல்ல. ஆகவே ஒரு நாளில் ஒரு முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.தேன் கலந்த எலுமிச்சை சாற்றுடன் மிளகு சேர்ப்பதால் சளி பிடிக்காமல் இருக்க உதவுகிறது.
விரதம்
விரதம் இருப்பது என்பது நீண்ட கால நம்பிக்கை மற்றும் விரதத்தைப் பற்றி ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது .
விரதம் இருப்பது மிகவும் அவசியம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. விரதம் என்பது ஒரு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் முறையாகும். விரதம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் கெட்டு சோர்வு உண்டாவதாக பலரும் எண்ணுகின்றனர்.
ஆனால் அது உண்மை அல்ல. விரதம் என்பது மிகவும் அவசியம், மேலும், விரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை விரதம் இருப்பது உடலுக்கு நன்மை தரும். உங்கள் உடலின் செரிமான மண்டலம் முழுவதும் உள்ள நச்சுகளை அகற்றி தூய்மை படுத்த இந்த விரதம் உதவுகிறது. விரதம் இருக்கும் நாட்களில் க்ரீன் டீ மற்றும் தண்ணீர் குடிப்பது நல்லது.மேலும், இந்த முறையை செய்வதால் ஒரு நாளில் அதிக மாற்றத்தை காணமுடியும்.
உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்
0 comments:
Post a Comment