குளிர் காலத்தில் உண்டாகும் நோய்களை குணப்படுத்த ஆயுர்வேத முறையில் தீர்வு காணலாம்.
குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது அனைவரது வீட்டிலும் பார்த்து பார்த்து பிள்ளைகளை உபசரிப்பார்கள். காரணம் குளிர் காலத்தில் நோய் தொற்று அதிகமாக இருக்கும்.அதிக குளிரினால் உடல் உறைந்து போய் ரத்த ஓட்டம் சீராக எப்பொழுதும் போல் செயல்படாமல் மூட்டுகளில், தசைகளில் வலி, வீக்கம் ஏற்படும்.
இதற்கு ஆயுர்வேத முறையில் தீர்வு கிடைக்கும் என்று கூறுகின்றனர் பிரபல வல்லுனர்கள். குளிரினால் ஏற்படும் நோய்கள், அதற்கு என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்று ஒரு பட்டியலே உள்ளது.
ஜீரணக் கோளாறு
அதிக குளிரால் நமக்கு பசி எடுக்காது அதனால் அஜீரண கோளாறு ஏற்படும். எப்பொழுதும் அதிகம் சாப்பிடுபவர்கள் குளிர் காலத்தில் குறைவாக சாப்பிட்டால் குடலில் மந்தம் ஏற்படும். சரியான உணவு உட்கொள்ளாவிட்டால் ஜீரண கோளாறு ஏற்படும், உடல் சோர்வடையும்.
உணவு முறை
குளிர் காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்பு அதிகம் உள்ள உணவை எடுத்து கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள கோதுமை, மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு, பால் பொருள்கள் கரும்புச்சாறு வெந்நீர் போன்ற பொருட்கள் உணவில் சேர்த்துக்கொண்டு அதனை எடுத்து கொண்டால் இக்குளிர்காலத்தில் உடம்பு திடமாகவும் சத்தாகவும் இருக்கும். அதனால். நோயிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மூட்டுவலி
குளிர் காலத்தில் சில நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். முக்கியமாக உடலில் எந்த பகுதியில் வலிகள் அதிகமாக வருமோ அதில் வீக்கம் ஏற்படும். மூட்டு, இடுப்பு ஸ்பான்டிலிட்டிஸ் போன்ற பகுதிகளில் வலி தீவிரம் அடையும்.
காரணம், வறட்டுக் குளிரின் காரணத்தால் வாதம் ஏற்படும். அந்த வாதம் அதிகரித்தால் நாள்பட்ட நோய்கள் தீவிரமாகும்.இதற்கு ஆயுர்வேதத்தில் உடனடி தீர்வு கிடைக்கும். ஷூலக்ணம், வேதனஸ்பதனம் போன்றவற்றையால் இந்த வலிகளை குணப்படுத்தலாம்.
குளிரின் வறட்சியை போக்க
அதிக குளிரால் தோல் வறட்சியாக இருக்கம் அதற்கு சிறப்பு அப்பியங்கள் மற்றும் பஞ்சகாம வழிமுறைகள் மூலம் நிவாரணம் கிடைக்கும். இதற்கேற்ப எண்ணெய் வகைகள் உண்டு அதன் மூலம் வறட்சியை போக்கலாம். நம் உடலிற்கு ஏற்ப எண்ணெய்கள் ஆயுர்வேத மருத்துவரினால் வழங்கப்படும்.
சரும பிரச்னைகளுக்கு களிம்பு பயன்படுத்தலாம். இது குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் பிரச்னைகளுள் ஒன்றாகும்.
உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்
0 comments:
Post a Comment