இந்தோனேசியாவில் 8 பேர் கொல்லப்பட்ட விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து சிறுவன் ஒருவரை உயிருடன் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இருந்து 8 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், 40 நிமிடங்களுக்கு பின்னர் நடுவானில் மாயமானது.
கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு இழந்த நிலையில் விமானத்தை தேடும் பணியில் சிறப்பு படையினர் பணியமர்த்தப்பட்டனர்.
சனிக்கிழமையன்று நடந்த இச்சம்பவமானது மலைப்பிரதேசம் என்பதாலும், விமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்ததாலும், கால்நடையாகவே தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே ஞாயிறு அதிகாலை ஆக்ஸ்பில் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
சுமார் 2 மணி நேரம் நடந்து சம்பவப்பகுதிக்கு வந்து சேர்ந்த மீட்புக்குழுவினர் 8 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். 12 வயது சிறுவன் ஒருவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதையும் கண்டறிந்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுவனை உடனடியாக மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.
மலைப்பிரதேசமும், அதனுடன் அடர்ந்த வனப்பகுதியுமானதால் மீட்புக்குழுவினருக்கு சம்பவப்பகுதிக்கு செல்ல பல மணி நேரம் பிடித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மோசமான வானிலை காரணமாக இதே பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணமான 54 பயணிகளும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment