பிரான்ஸ், அடுத்த ஆண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சுமார் 16,500 விமானங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.
எதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளன?
பிரான்சில் பயன்படுத்தப்பட்டுவரும் விமான கட்டுப்பாட்டு அமைப்பு, 1970களில் உருவாக்கப்பட்டதாகும். அது, சில விடயங்களுக்காக இன்னமும் காகிதங்களைப் பயன்படுத்தும் பழமையான ஒரு திட்டம்.
ஆகவே, பிரான்சுக்கு வரும், பிரான்சிலிருந்து புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, அதாவது, முன்னேற்றங்கள் செய்வதற்கான, அல்லது நவீனப்படுத்தவேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆகவேதான், 2024ஆம் ஆண்டு,ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள்?
இந்தப் பணி நடைபெறும் நேரத்தில், சுமார் 16,500 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதனால், 2024, ஜனவரி மற்றும் பிப்ரவரி காலகட்டம் பயணிகளுக்கு சிக்கலான ஒரு காலகட்டமாக அமைய உள்ளது.
பிரான்ஸ் வான்வெளி வழியாக, ஆண்டொன்றிற்கு 2.5 மில்லியன் விமானங்கள் கடந்து செல்கின்றன. ஆகவே, எந்த பிரச்சினை ஏற்பட்டாலும், பிரான்சில் மட்டுமின்றி, மொத்த ஐரோப்பாவிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment